Accaddemy

அலுத்கம மல்லிகாஸ் தீயிற்கான காரணத்தை இரண்டு மாதங்களாகியும் கண்டரியாத பொலிஸார் பெஷன் பக் தீயிற்கான காரணத்தை கண்டறிந்தால் மகிழ்ச்சி !!


பெஷன் பக் தலைமயத்தில் தீ ஏற்பட்டு சில மணித்தியாலங்களில் அது ஒரு விபத்தாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் பாதுகாப்பு கமரா தொகுதியையும் கட்டாயப்படுத்தி எடுத்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அலுத்கமையில் தீக்கிரையான மல்லிகாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சற்றுமுன்னர் மடவளை நியுஸுக்கு தொடர்பு கொண்டு இந்த விபத்து தொடர்பில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

மல்லிகாஸ் நிறுவனம் தீ பிடித்தபோது பொலிஸார் ஸ்தலத்திற்க்கு வந்த உடனே இது இலக்ரிக் ஷொக் ஆக இருக்கலாம் என குறிப்பிட்டார்.

எமது நிறுவனம் தீக்கிரையாகி 2 மாதங்கள் ஆன நிலையில் இதுவரை அரச ரசாயன பகுப்பாய்வு அறிக்கையை எமக்கு தரவில்லை. மர்ம கொலைகளை 24 மணிநேரத்தில் கண்டறியும் எமது பொலிஸார் எமது இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை பெற்றுத்தர திராணியற்றவராக உள்ளனர்.

எமக்கு 2 மதம் சென்றும் கிடைக்காத அறிக்கை பெஷன் பக் நிறுவனத்துக்கு எப்போது கிடைக்குமோ தெரியாது.

இவர்கள் கூறுவது போல எமது மல்லிகாஸ் நிறுவனத்தில் இலக்றிக் ஷொக் இடம் பெற்ற அதே நேரத்தில்  ( இரவு 8 இல் இருந்து 9 மணி ) பெஷன் பக்கிலும் இடம்பெற்றுள்ளது.

அலுத்கமையை காட்டி ஆட்சிக்கு வந்த இந்த பொல்லாட்சி இது வரை மஹிந்த ராஜபக்‌ஷ மதிப்பீடு செய்த பொருள் சேத நட்ட ஈட்டை கூட பெற்றுத் தரவில்லை.

எல்லாவற்றுக்கும் மஹிந்த ராஜபக்‌ஷவை குற்றம் சுமத்துவதை நிறுத்தி விட்டு சட்டத்தை சரியாக அமுல் படுத்துங்கள் என தான் அரசாங்கத்திடம் கோருவதாக அவர் குறிப்பிட்டார்.
அலுத்கம மல்லிகாஸ் தீயிற்கான காரணத்தை இரண்டு மாதங்களாகியும் கண்டரியாத பொலிஸார் பெஷன் பக் தீயிற்கான காரணத்தை கண்டறிந்தால் மகிழ்ச்சி !! அலுத்கம மல்லிகாஸ் தீயிற்கான காரணத்தை இரண்டு மாதங்களாகியும் கண்டரியாத பொலிஸார் பெஷன் பக் தீயிற்கான காரணத்தை கண்டறிந்தால் மகிழ்ச்சி !! Reviewed by Madawala News on 11/20/2016 08:20:00 AM Rating: 5