தேசிய மீலாத் போட்டியில் (பேச்சு) பொத்துவில் மத்திய கல்லூரி மாணவருக்கு தேசிய ரீதியில் முதலாம் இடம்...

2016 ஆம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழாவின் இறுதிப்போட்டியின் பேச்சுப்போட்டியில் "தேசிய ஒருமைப்பாட்டிற்கு இஸ்லாம் கூறும் வழிமுறைகள்" எனும் தலைப்பில் பத்து நிமிடங்கள் பேசி  பொத்துவிலை சேர்ந்த சம்சுடீன் முஹம்மட் நப்லால் (ஷராபத்) எனும் மாணவன் தேசிய ரீதியில்  முதல் இடம் பெற்றுள்ளார்.

இப்போட்டியானது இன்று (2016.10.05) கொழும்பு-12 பண்ராடநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள பாத்திமா மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.  இவர் பொத்துவில் மத்திய கல்லூரியில்  உயிரியல் விஞ்ஞானப்பிரிவு மாணவராவார். 

இச்சாதனை மூலம் ஊர் பெருமையடைவதோடு  குறித்த  மாணவணை பொத்துவில் கல்விச்சமூகமும், பாடசாலை நிருவாகமும் வாழ்த்துகிறது.

M.A.Jeswath

தேசிய மீலாத் போட்டியில் (பேச்சு) பொத்துவில் மத்திய கல்லூரி மாணவருக்கு தேசிய ரீதியில் முதலாம் இடம்... தேசிய மீலாத் போட்டியில் (பேச்சு)  பொத்துவில் மத்திய கல்லூரி மாணவருக்கு தேசிய ரீதியில் முதலாம் இடம்...  Reviewed by Madawala News on 11/05/2016 10:56:00 PM Rating: 5