Accaddemy

முஸ்லீம் அமைச்சர்கள் இன்றும் பிரதமரிடம் நேரடி அழுத்தம் : இனவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைக்கு உத்தரவு ....



தற்போது நாட்டில் முஸ்லீம்களுக்கு எதிராக  சிலர் மேற்கொள்ளும் இனவாத நடவடிக்கைகள் தொடர்பில் முஸ்லீம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரின் நேரடி கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

வரவு செலவு திட்டத்தில் சிறுபான்மையினரின் நலன் தொடர்பில் யோசனை முன்வைப்பத்தற்கு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் சந்திப்பு இன்று ஹம்பாந்தோட்டை ஷெங்கிலா ஹோட்டலில் இடம்பெற்ற போது அங்கு தற்போது நாட்டில் மீண்டும் தலைதூகியுள்ள சிறுபான்மையினருக்கு எதிரான இனவாத பேச்சுக்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் முஜீப் ரஹ்மான் பிரதமரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.

அதனை தொடர்ந்து அமைச்சர்களான ரவுப் ஹக்கீம் , அமீர் அலி , பாரளுமன்ற உறுப்பினர்களான மன்சூர் , உள்ளீட்ட பலரும் தற்போதய நிலவரம் தொடர்பில் பிரதமருக்கு தெளிவுபடுத்தியுள்ளதுடன் சில வீடியோக்களையும் அவருக்கு காட்டியுள்ளனர்.

இவர்களது விடயங்களுக்கு செவிசாய்த்த பிரதமர் சட்டம் ஒழுங்கு அமைசச்சருக்கு தேவையான அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

மிக மிக விரைவில் இனவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசியல் உயர்மட்ட தகவல்கள் மடவளை நியுஸுக்கு தெரிவிக்கின்றன.

ஏற்கனவே நேற்றுமுன் தினம் இனவாத கருத்து கூடிவரும் டன் பிரியசாதின் வீடியோ அடங்கிய சீடி சட்டம் ஒழுங்கு அமைச்சருக்கு சாகல முஜுப் றஹ்மான் அவர்களினால் வழங்கப்பட்டுள்ளது.
முஸ்லீம் அமைச்சர்கள் இன்றும் பிரதமரிடம் நேரடி அழுத்தம் : இனவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைக்கு உத்தரவு .... முஸ்லீம் அமைச்சர்கள் இன்றும் பிரதமரிடம் நேரடி அழுத்தம் : இனவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைக்கு உத்தரவு .... Reviewed by Madawala News on 11/13/2016 09:15:00 PM Rating: 5