tg travels

நிகவரட்டிய பள்ளிவாயல் தாக்குதல் ! முஸ்லீம் அமைப்பு மோதலா என்ற ரீதியிலும் விசாரனை ..


நிகவரடிய பள்ளிவாயல் தாக்குதல் பின்னணியில் முஸ்லீம்களிடையே  உள்ள அமைப்பு மோதல் காரணமாக இருக்குமா என்ற கோணத்திலும் விசாரனைகள் முன்னெடுக்கப்படுவதாக மாகாணத்துக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்யட்சகர் குறிப்பிட்டுள்ளார்.

குருனாகல் மாவாட்ட சுதந்திர கூட்டமைப்பு  மாவட்ட அமைப்பாளர் அப்துல் சத்தார் மாகாணத்துக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்யட்சகரை தொடர்பு கொண்டு விசாரனை நடவடிக்கைகள் தொடர்பில் கேட்டுள்ள போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்...

நிகவரட்டிய பிரதேசத்தில் அனைத்து மக்களும் இன நல்லுறவுடன் வாழ்வதாகவும் இது ஒரு நாசகார செயலாக இருக்க வாய்ப்புகள் குறைவு எனவும்  இதுதொடர்பில் விசாரனைகள் முன்னெடுக்கப்படும் அதேவேளை அங்கு இரு முஸ்லீம் பிரிவுகளுக்கு இடையே பிரச்சினை இருந்துவருவதால் அவர்களுக்கு இடையேயான பிரச்சினையில் விளைவா என்பது தொடர்பில் விசாரனைகள் மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அமைப்பு இயக்க பிணக்குகள் தொடர்பில் பள்ளிவாயல் நிர்வாகி அல்ஹாஜ் நவாஸ் அவர்களிடம் தொடர்புகொண்டு கேட்டபோது ...

இதே கோணத்தில் விசாரனைகளை மேற்கொண்ட பொலிஸாரும் தம்மிடம் கேள்வி எழுப்பியதாகவும் இயக்க அமைப்பு பிளவுகளுக்காக அவ்வாறு எமது சமூகத்தில் யாரும் நடந்துகொள்வத்தில்லை எனவும் தங்கள் பிரதேசத்தில் இயக்க அமைப்பு பிணக்குகள் பாரதூரமான அளவு இல்லை எனவும் அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டதாக குறிப்பிட்டார்.

நிகவரட்டிய பள்ளிவாயல் தாக்குதல் ! முஸ்லீம் அமைப்பு மோதலா என்ற ரீதியிலும் விசாரனை .. நிகவரட்டிய பள்ளிவாயல் தாக்குதல் ! முஸ்லீம் அமைப்பு மோதலா என்ற ரீதியிலும் விசாரனை .. Reviewed by Madawala News on 11/07/2016 03:49:00 PM Rating: 5