Accaddemy

சமல் ராஜபக்‌ஷவை பிரதமராக்கி சுதந்திர கட்சியை ஒன்று சேர்க்க யோசனை ...


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மூத்த சகோதரரும் முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்‌ஷவுக்கு பிரதமர் பதவியை பெற்றுக்கொடுத்து பிளவுபட்டுள்ள சுதந்திர கட்சியை இணைக்கும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திர கட்சியின் மைத்ரி அணி முக்கியஸ்தர்கள் சிலர் இந்த முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில் இது தொடர்பிலான யோசனை மஹிந்த அணிக்கும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனை தொடர்பில் இதுவரை தீர்க்கமான முடிவொன்று எட்டப்படாத நிலையில் மஹிந்த தரப்பு இதற்கு உடன்படும் பட்சத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவை இதற்கு உடன்பட வைக்கும் முயற்சியில் இறங்க குறித்த சுதந்திர கட்சி தரப்பு தீர்மாணித்துள்ளது.

இந்த யோசனைகள் தொடராக முன்வைக்கப்பட்டு வந்த போதும் பெசில் தரப்பு புதிய கட்சி ஆரம்பிப்பதில் மிக தீவுரமாக இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
சமல் ராஜபக்‌ஷவை பிரதமராக்கி சுதந்திர கட்சியை ஒன்று சேர்க்க யோசனை ... சமல் ராஜபக்‌ஷவை பிரதமராக்கி சுதந்திர கட்சியை ஒன்று சேர்க்க யோசனை ... Reviewed by Madawala News on 11/01/2016 03:06:00 PM Rating: 5