Accaddemy

டன் பிரியசாத்துக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க பொலிஸ் மாஅதிபர் சற்றுமுன் உத்தரவு ...


முஸ்லீம்களுக்கு எதிராக குரோத கருத்துக்களை தெரிவித்து வந்த டன் பிரியாத்துக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் சற்றுமுன் உத்தரவிட்டுள்ளாக பாராளுமன்றத்தில் இருந்து கிடைக்கும் செய்திகள் மடவளை நியுஸுக்கு உறுதிப்படுத்தின.

முஸ்லீம் அரசியல் பிரதிநிதிகளான பிரதி அமைச்சர் அமீர் அலி முஜீப் ரஹ்மான் எம் பி உள்ளிட்டவர்கள் சற்றுமுன் பாராளுமன்றத்தில் பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடியுள்ளதுடன் நிலமைகளையுன் இதில் உள்ள பாரதூரமான விடயங்களையும்  நேரடியாக அவரிடம் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்த விடயத்தில் உள்ள நியாத்தை உணர்ந்துகொண்ட பொலிஸ் மாஅதிபர் உடனடியாக குறித்த நபரை கைதுசெய்ய உத்தரவிட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் மடவளை நியுஸுக்கு தெரிவித்தன.
டன் பிரியசாத்துக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க பொலிஸ் மாஅதிபர் சற்றுமுன் உத்தரவு ... டன் பிரியசாத்துக்கு எதிராக  உடனடியாக நடவடிக்கை எடுக்க பொலிஸ் மாஅதிபர் சற்றுமுன் உத்தரவு ... Reviewed by Madawala News on 11/15/2016 11:04:00 AM Rating: 5