ராணுவத்தில் ஆயுதக்குழுக்களை உருவாக்கியதின் மூலம் கோத்தாவே ரானுவத்தை அவமானப்படுத்திவிட்டார் ..


ஜோசப் பரராஜசிங்கம் , ரவி ராஜ் , லசந்த விக்ரமதுங்க உள்ளிட்டவர்களின் கொலைகளின் பின்னணியில் கோத்தாபய ராஜபக்‌ஷவே இருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

ஆவா குழுவை கோத்தாபய ராஜபக்‌ஷவின் தயாரிப்பு என ராஜித சேனாரத்ன கூறிய கருத்துக்கு ராணுவத்தை அவமானப்படுத்த வேண்டாம் என கோத்தாபய ராஜபக்‌ஷ பதில் அளித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்த ராஜித சேனா ரத்ன இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்...

நான் ரானுவத்தை அவமானப்படுத்த வில்லை கோத்தாபயவே ராணுவத்தில் ஆயுதக்குழுக்களை உருவாக்கி ராணுவத்தை அவமானப்படுத்திவிட்டார் எனவும் ஜோசப் பரராஜசிங்கம் , ரவி ராஜ் , லசந்த விக்ரமதுங்க உள்ளிட்டவர்களின் கொலைகளின் பின்னணியில் கோத்தாபய ராஜபக்‌ஷவே இருப்பதாகவும் விசாரனை முடிவில் உண்மைகள் வெளியாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
ராணுவத்தில் ஆயுதக்குழுக்களை உருவாக்கியதின் மூலம் கோத்தாவே ரானுவத்தை அவமானப்படுத்திவிட்டார் .. ராணுவத்தில் ஆயுதக்குழுக்களை உருவாக்கியதின் மூலம் கோத்தாவே ரானுவத்தை அவமானப்படுத்திவிட்டார் .. Reviewed by Madawala News on 11/04/2016 07:28:00 AM Rating: 5