Accaddemy

ஷரிஆ சட்­டத்தில் பெண்­களின் உரிமை தொடர்பில் பிரச்­சி­னைகள் உள்­ளன.


ஷரீஆ சட்­டத்தின் பிர­காரம் முஸ்லிம் பெண்­க­ளுக்கு 12 வயதில் திரு­மணம் செய்ய அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் விவா­க­ரத்­திலும் பிரச்­சி­னைகள் உள்­ளன.

எனவே முஸ்லிம் பெண்­களின் உரி­மையை பாது­காக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என இரா­ஜாங்க அமைச்சர் சுதர்­ஷினி பெர்­னாண்டோ புள்ளே தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை 2017 ஆம் ஆண்­டுக்­கான வரவு செலவுத் திட்­டத்தின் மகளிர் மற்றும் சிறுவர் விவ­கார அமைச்சின் செல­வின தலைப்­பி­லான குழு­நிலை விவா­தத்தின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்;

நாட்டின் பெண்­க­ளி­னதும் சிறார்­க­ளி­னதும் உரிமை பாது­காக்­கப்­பட வேண்டும். தற்­போது சில பெண்­களின் உரிமை பாது­காக்­கப்­பட வேண்டும். 

இதன் பிர­காரம் ஷரிஆ சட்­டத்தின் பெண்­களின் உரிமை தொடர்பில் பிரச்­சி­னைகள் உள்­ளன. குறிப்­பாக முஸ்லிம் பெண்­க­ளுக்கு 12 வயதில் திரு­மணம் முடிப்­ப­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. இது சிறுவர் உரிமை மீற­லாகும். 

அத்­துடன் விவா­க­ரத்து தொடர்­பிலும் பெண்­க­ளுக்கு பிரச்­சினை உள்­ளது. அது மாத்­தி­ர­மன்றி சொத்­து­ரிமை விட­யத்­திலும் பல பிரச்­சி­னைகள் உள்­ளன. இதன்­போது பெண்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­ப­டு­கின்­றது. 

ஆகவே இது தொடர்பில் அர­சாங்கம் அவ­தானம் செலுத்தி உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இந்த சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். 

மேலும் முஸ்லிம்  பெண்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றார். 
-Vidivelli -
ஷரிஆ சட்­டத்தில் பெண்­களின் உரிமை தொடர்பில் பிரச்­சி­னைகள் உள்­ளன. ஷரிஆ சட்­டத்தில் பெண்­களின் உரிமை தொடர்பில் பிரச்­சி­னைகள் உள்­ளன. Reviewed by Madawala News on 11/30/2016 10:59:00 AM Rating: 5