Ad Space Available here

முஸ்லிம்களின் சமகால பிரச்சினைகள் அமைச்சரவையில் விசேட அவதானம்...


(ARA FAREEL - Vidivelli )
  • தனியார் சட்ட விவகாரம் குறித்து எடுத்துரைப்பு 
  • மாணிக்கமடுவில் சிலை வைப்புக்கு அதிருப்தி
  • பள்ளிவாசல் தாக்குதல்கள் குறித்து பிரஸ்தாபம்
  • இனவாத குழுக்களின் செயற்பாடுகள் பற்றி பேச்சு

முஸ்­லிம்கள் எதிர்­நோக்­கி­யுள்ள சம­கால பிரச்­சி­னைகள் தொடர்பில் நேற்று நடை­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் விஷேட கவனம் செலுத்­தப்­பட்­டது. முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் குறித்து முஸ்லிம் அமைச்­சர்­க­ளினால் விரி­வாக விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டன.

முஸ்­லிம்கள் மத்­தியில் தற்­போது சல­ச­லப்­பினை ஏற்­ப­டுத்­தி­யுள்ள முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தம் தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­தபா நிலை­மை­களை விளக்­கினார்.

அதனைத் தொடர்ந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் நீர்­வ­ழங்கல், வடி­கா­ல­மைப்பு மற்றும் நகர் திட்­ட­மிடல் 
அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீமும் முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் தொடர்பில் அர­சாங்கம் எடுத்­துள்ள தீர்­மானம் பற்றி முஸ்­லிம்கள் அதி­ருப்­தி­ய­டைந்­துள்­ள­தாக தெரி­வித்தார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்­ச­ர­வையில் உரை­யாற்­று­கையில், முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளமை முஸ்­லிம்கள் மத்­தியில் பாதிப்­பையும் எதிர்ப்­பையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. ஐரோப்­பிய ஒன்­றியம் ஜி.எஸ்.பி. வரிச்­ச­லு­கைக்­காக முஸ்லிம் தனியார் சட்­டத்தை திருத்­து­மாறு நிபந்­தனை விதித்­தி­ருப்­பது முஸ்­லிம்­களை அதி­ருப்தி கொள்ளச் செய்­துள்­ளது என்றார்.

இச்­சந்­தர்ப்­பத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்கள் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் வற்­பு­றுத்­தல்­க­ளுக்­காக மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என மறுத்தார்.

தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், அமைச்சர் ஹக்கீம் முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்ள நிய­மிக்­கப்­பட்­டி­ருக்கும் அமைச்­ச­ரவை உப­குழு, ஏற்­கெ­னவே நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஓய்­வு­பெற்ற முன்னாள் உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்­சூபின் அறிக்கை வெளி­யி­டப்­ப­டும்­வரை எந்த தீர்­மா­னமும் மேற்­கொள்­ளப்­படக் கூடாது. அந்­தக்­கு­ழுவின் அறிக்­கையின் பின்பே தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்றார்.

இதற்கு பிர­தமர் உடன்­பட்டார். சலீம் மர்­சூபின் அறிக்கை கிடைத்­த­பின்பே அமைச்­ச­ரவை உப­குழு அதனை ஆராய்ந்து திருத்­தங்கள் தொடர்பில் தீர்­மானம் எடுக்க வேண்டும் என்றார்.

பௌத்த தீவி­ர­வா­தமும் முஸ்லிம் தீவி­ர­வா­தமும்
வெளி­நாட்­ட­மைச்சர் மங்­கள சம­ர­வீர நாட்டில் பௌத்த தீவி­ர­வா­தமும், முஸ்லிம் தீவி­ர­வா­தமும் தலை­தூக்­கி­யுள்­ள­தாகத் தெரி­வித்தார். அவர் தனது உரையில் ‘முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் செயற்­பட்­டு­வந்த பௌத்த தீவி­ர­வாத குழுக்கள் மீண்டும் தலை­தூக்­கி­யுள்­ளன.

அதே­போன்று இதற்கு ஏட்­டிக்குப் போட்­டி­யாக ஒரு முஸ்லிம் தீவி­ர­வாத குழுவும் இறங்­கி­யுள்­ளது. இக்­கு­ழுக்கள் அரசின் ஸ்திரத்­தன்­மையை இல்­லாமற் செய்யும் முயற்­சி­களில் ஈடு­பட்­டுள்­ளன.

ஒரு முஸ்லிம் தீவி­ர­வாத குழு ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்­டுள்­ளது. அர­சுக்கு விரோத அறிக்­கை­களை வெளி­யிட்­டு­வ­ரு­கி­றது. இக்­கு­ழுக்­க­ளுக்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது என்றார்.

இதே­வேளை இதற்குப் பதி­ல­ளித்து அமைச்சர் ஹக்கீம் உரை­யாற்­று­கையில், நாட்டில் மஹிந்த ராஜபக் ஷ அரசின் காலத்தில் போன்று முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் அதி­க­ரித்து வரு­கின்­றன.இந்தவாரம் இரண்டு பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டுள்­ளன. குரு­நாகல் மாவட்­டத்தில் தெலி­யா­கொன்­ன­யிலும், நிக­வெ­ரட்­டி­யிலும் இச்­செ­யல்கள் அரங்­கே­றி­யுள்­ளன. இச்­செ­யற்­பா­டு­க­ளுக்கு அர­சாங்கம் இட­ம­ளிக்­கக்­கூ­டாது.

வெளி­நாட்­ட­மைச்சர் குறிப்­பிட்ட முஸ்லிம் அமைப்பில் எமக்கும் உடன்­பா­டில்லை, ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் அறிக்­கை­க­ளையும் இந்தச் சூழ்­நி­லையில் அங்­கீ­க­ரிக்க முடி­யாது. குறித்த முஸ்லிம் அமைப்பின் செயற்­பா­டு­களை நாம் கண்­டிக்­கிறோம். இன்று (நேற்று) அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை முஸ்லிம் சிவில் அமைப்பின் பிர­தி­நி­தி­களை அழைத்து முஸ்­லிம்­களின் சம­காலப் பிரச்­சி­னைகள் அவற்­றுக்­கான தீர்­வுகள் பற்றி ஆராய்ந்து வரு­கி­றார்கள் என்றார்.

பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­ப­டு­வ­தினால் முஸ்­லிம்கள் அச்­ச­ம­டைந்­துள்­ளார்கள். அர­சாங்கம் இது சம்­பந்­த­மாக உட­ன­டி­யாக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

மாணிக்­க­ம­டு­ம­லையில் புத்­தர்­சிலை விவ­காரம்
இறக்­காமம் மாணிக்­க­மடு மலையில் புத்தர் சிலை வைக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்­பிலும் அமைச்சர் ஹக்கீம் எதிர்ப்­பினைத் தெரி­வித்தார். மாணிக்­க­மடு பகு­தியில் பௌத்த குடும்பம் ஒன்­றேனும் வசிக்­காத நிலையில் அண்­மையில் புத்தர் சிலை­யொன்று வைக்­கப்­பட்­டுள்­ளது.

அப்­ப­கு­தியில் தமிழ், முஸ்லிம் மக்­களே வாழ்­கி­றார்கள். நீதி­மன்ற உத்­த­ர­வி­னையும் மீறி இந்­தச்­சிலை வைக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

பௌத்­தர்­களே இல்­லாத இடத்தில் புத்தர் சிலை வைக்­கப்­பட்­டுள்­ளதால் அப்­ப­கு­தி­யி­லுள்ள சிறு­பான்மை மக்கள் பெரும் அச்­சத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளனர். எனவே இது சம்­பந்­த­மாக காலம் தாழ்த்­தாது தீர்வு காணப்­பட வேண்டும் என்றார்.

பிர­தமர் ரணி­லிடம் முறைப்­பாடு
நேற்று பாரா­ளு­மன்­றத்தில் அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்­கீமும், மனோ கணே­சனும் மாணிக்கமடுமலையில் புத்தர்சிலை வைத்த விவகாரம் குறித்து பிரதமரிடம் முறையிட்டனர்.

நல்லாட்சியில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இச்சந்தர்ப்பத்தில் பௌத்தர்களே இல்லாத பகுதியில் சிலை வைத்திருப்பது பாரதூரமான விடயம். இந்த விடயம் உடன் தீர்வு காணப்படவேண்டும்.

புத்தர் சிலை விவகாரத்தில் அமைச்சர் தயா கமகேயே சம்பந்தப்பட்டுள்ளார். அதனால் அவர் அறிவுறுத்தப்பட வேண்டும். இதனால் உருவாகியுள்ள அசாதாரண நிலை அவருக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும் என அமைச்சர்கள் இருவரும் பிரதமரை வேண்டிக்கொண்டனர்.

 

முஸ்லிம்களின் சமகால பிரச்சினைகள் அமைச்சரவையில் விசேட அவதானம்... முஸ்லிம்களின் சமகால பிரச்சினைகள் அமைச்சரவையில் விசேட அவதானம்... Reviewed by Madawala News on 11/09/2016 02:59:00 PM Rating: 5