ராஜிதவின் கருத்தை விரும்பியவர்கள் நம்பலாம் !


அண்மையில் பாராளுமன்றில் கருத்துரைத்த நீதியமைச்சர் இலங்கையை சேர்ந்த நான்கு குடும்பங்களை சேர்ந்த 32 முஸ்லிம்கள் ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவித்த கருத்தினை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன மறுத்திருந்த நிலையில்,

அவரின் கருத்தை நம்புபவர்கள் நம்பலாம் என  நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச விளக்கமளித்துள்ளார்.

அத தெரன தொலைக்காட்சியுடனான நேர்காணல் நிகழ்சியில் இவ்வாறு தெரிவித்துள்ள அமைச்சர், 

தனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே கருத்து தெரிவித்திருந்ததாகவும் தனது பாராளுமன்ற உரையிலேயே தான் தெரிவித்த கருத்துக்கள் அரசின் நிலைப்பாடு இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இதில் யார் உண்மையைப் பேசுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் ‘அறிவு’ மக்களுக்கு இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ராஜிதவின் கருத்தை விரும்பியவர்கள் நம்பலாம் ! ராஜிதவின் கருத்தை விரும்பியவர்கள் நம்பலாம் ! Reviewed by Madawala News on 11/28/2016 10:00:00 AM Rating: 5