Accaddemy

தீவிரவாதம் இஸ்லாத்துக்குச் சொந்தமில்லை..



அமைதியையும், சமாதானத்தையும், விட்டுக்கொடுப்பையும், மனித சகோதரத்துவத்தையும் நிலைநிறுத்தி வழிகாட்டும் இஸ்லாம் அடிப்படைவாதத்தையும், தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் ஊக்கிவிப்பதாகவும், இஸ்லாத்தைப் பின்பற்றுகின்ற முஸ்லிம்கள் அடிப்படைவாதிகளாகவும், தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும்  செயற்படுகிறார்கள் எனவும் சித்தரிப்பதற்கான முயற்சிகள் உலகளவிலும் உள்நாட்டிலும் மத எதிர்பாலகர்களினாலும் இனவாதக் கடும்போக்காளர்களினாலும் முன்னெடுக்கப்பட்டு வருவதைக் காண முடிகிறது.
 
இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் சமூக, பொருளாதார வளர்ச்சியை ஜீரணித்துக்கொள்ள முடியாத 'இஸ்லாமிக் போபியா' என்ற இஸ்லாம் தொடர்பான அநாவசியப் பயம் கொண்டவர்களினால் இஸ்லாம் தீவிரவாதப் போக்குக் கொண்டது என முழு உலகையும் நம்பவைக்கும் வகையில்    அதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட செயற்றிட்டங்களும் பிரச்சாரங்களும் அன்று முதல் இன்றுவரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்காக பல முகவர்கள் உலகளாவிய ரீதியில் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான சகல உதவிகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இத்தகையவர்களினால் வழங்கப்பட்டு வருகிறது.
 
இஸ்லாம் தொடர்பாக மேற்குலகின் பயம் உலகின் பல நாடுகளுக்கும் வியாபித்துள்ள நிலையில், இதனால், அரபுலக முஸ்லிம்கள் மாத்திரமல்ல ஆசிய, தென்கிழக்காசிய நாடுகளிலுள்ள முஸ்லிம்களும் தத்தமது நாடுகளில்  நெருக்குதல்களையும், தாக்குல்களையும் சந்திக்க வேண்டியவர்களாக உள்ளனர்.
 
அரபுலக நாடுகளில் அல்லது உலகளாவிய நாடுகளில் வாழும் முஸ்லிம்கள்;; தங்களுக்குள் காணப்படும் முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்வதற்காக மேற்கொள்கின்ற கருத்தாடல்களை, செயற்பாடுகளை சாதமாக்கி, அக்கருத்தாடல்களுக்கும் செயற்பாடுகளுக்கும் உதவிக் கரம் நீட்டுவதான மயாயை ஏற்படுத்தி, அம்மாயையின் பிடிக்குள் அவர்களைச் சிக்க வைத்து, அவர்களுக்கிடையில் பிரிவினைகளை ஊக்கப்படுத்தி, இயக்கங்களாகவும், அமைப்புக்களாகவும் உருவாக்கி,  ஒட்டுமொத்த உலக முஸ்லிம்களையும் அழிவின் விளிம்புக்கு  மேற்குல இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள்; இட்டுச் சென்றுள்ளனர்.
 
இதனை சிரியாவிலும், ஈராக்கிலும், யெமனிலும் இன்னும் சில நாடுகளிலும் வௌ;வொறு பெயர்களில் இயங்குகின்ற அமைப்புக்களுக்கிடையிலும் அந்நாட்டு அரசுகளுக்கும் இயக்கங்களுக்கிடையிலும் அமெரிக்க, ரசியா உட்பட மேற்குல நாடுகளின் ஒத்துழைப்புடன் நடந்தேறுகின்ற கோர யுத்தங்களையும் அதன் அழிவுகளையும் சுட்டிக்காட்ட முடியும்.
 

அழிவுகளுக்கு மத்தியில் அரபுலகம்.

உலகின் 700 கோடி மக்கள் தொகையில்  பின்பற்றப்படுகின்ற மதங்களின் வரிசை நிலையில் அதிகளவிலான மக்கள் பின்பற்றுகின்ற இரண்டாவது மார்க்கமாக இஸ்லாம் உள்ளது.

2010ஆம் ஆண்டின் சர்வதே புள்ளிவிபரங்களின் பிரகாரம,; உலகில் 1.6 பில்லியன் முஸ்லிம்கள் உள்ளனர். உலக சனத்தொகையில் 23 வீதத்தினை முஸ்லிம்கள் கொண்டுள்ளனர். அதிகளவிலான முஸ்லிம்கள் மத்திய கிழக்கு, வட ஆபிரிக்க, ஆசிய நாடுகளில் வாழ்கின்றனர். ஏறக்குறைய 50 நாடுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர். முஸ்லிம்களின் எண்ணிக்கையில் 62 வீதமானோர் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாழ்வதாக அப்புள்ளிவிபர அறிக்கை குறிப்பிடுகிறது. பிந்திய விபரங்களின் பிரகாரம் 2050ஆம் ஆண்டளவில் உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 2.8 பில்லியனாகக் காணப்படுமென குறிப்பிடப்படுகிறது.

இஸ்லாத்தின் வளர்ச்சி வேகத்தையும்,; முஸ்லிம்களினதும் சனத்தொகை உள்ளிட்ட அனைத்து முன்னேற்றங்களையும்; சகித்துக்கொள்ள இயலாத நிலையில், அவற்றை அழித்தொழிக்கும் சதித்திட்டத்தின் கீழ் மேற்குல இஸ்லாமிய எதிர்பாலர்களால் பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றாக பல்வேறு போலிக்காரணங்களை முன்வைத்து ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானியில் முன்னெடுக்கப்பட்ட யுத்தங்களைச் சுட்டிக்காட்ட முடியும்.

சர்வதேச தகவல்களின் பிரகாரம், இதுவரை யுத்தத்தினால் 1 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் ஈராக்கில் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். 2003ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புக்களின் பிரகாரம், 4 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள்; ஈராக்கில் அகதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள், 4.5 மில்லியன்; சிறார்கள் பெற்றோரை இழந்திருக்கிறார்கள், ஆயிரக்கணக்கான பெண்கள்;, சிறார்கள், கடத்தப்பட்டும் இலட்சக்கணக்கான ஈராக்கிய மக்கள் அங்கவீனமாக்கப்பட்டுமுள்ளனா.

பல்லாயிரக்கணக்கானோர் வாழ்வின் அத்தனை கட்டமைப்புக்களையும், அடிப்படைத் தேவைகளையும் இழந்தவர்களாக உள்ள நிலையில்; தினமும் அழிவுகளை அம்மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறே, சிரியாவினதும் ஏனைய உள்ளுர் மோதல்கள் இடம்பெறுகின்ற இஸ்லாமிய நாடுகளினதும் நிலையாகும்.

முஸ்லிம் உலகின் மீதுகொண்ட  காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் நேரடியாக  யுத்தத்தில் பங்குகொணடதனால் அந்நாட்டுப் படைகள் அழிவுகள் பலதைக் கண்டதது. இதனால், அந்நாடுகளுக்கு ஏற்பட்ட சமூக பொருளாதா நெருக்கடிகளைக் குறைத்துக்கொள்வதற்கும் அழிவுகளைத் தவிர்த்துக்கொள்வதற்கும் தமது நீண்ட, குறுகிய கால இலக்குகளை இவகுவாக அடைந்துகொள்வதற்குமாக அந்நாடுகளுக்குள்ளேயே இயக்கங்களை உருவாக்கி  பிரச்சினைகளைத் தோற்றுவித்து, இஸ்லாமியக்; கலாசார ஆடைகள் அணித்தவர்காக அல்லது அணிவிக்கப்பட்டவர்களாகக் காட்சியளிக்கும் அவர்கள் புரியும் மனிதப் படுகொலைகள், தண்டனைகளை உலகுக்குச் காட்சிப்படுத்தி, முஸ்லிம்களை அடிப்படைவாதிகளாகவும், தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் புடம்போடச் செய்யயும் கைகரியங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனால், இந்நாடுகளின் சமூக, பொருளாதா, அரசியல், கல்வி சுகாதாரம் என அத்தனையையும் கேள்விக்குறியாக்க்கப்பட்டு உயிர்களைக் கையில் பிடித்துக்கொண்டு வாழும் சூழ்நிலைகளை மேற்புகுல முஸ்லிம் எதிர்ப்பாலர்கள்; இந்நாடுகளில் உருவாக்கியுள்ளனர். அவை மாத்திமின்றி, அவர்களால் உருவாக்கப்படடவர்களைக்  கொண்டு இஸ்லாத்தின் போதனைகள், சட்டதிட்டங்கள் வக்கிரமிக்கதும் கொடூரமானதும் என உலகத்திற்குக் காட்டிக்கொண்டுமிருக்கிறார்கள். இதற்கு இஸ்லாத்தின் போதனைகளைப் புறந்தள்ளிய முஸ்லிம்களும் ஒத்துழைப்பு வழங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

இஸ்லாமியர்களைக் கொண்டே இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் கேவலப்படுத்துவதற்காகவும் அழிப்பதற்காகவும் இடம்பெறும் நிகழ்வுகளை தங்களது ஆளுகைகளுக்குட்பட்ட ஊடகங்கள் வாயிலாகக் காட்சிப்படுத்தி உலகை நம்பவைக்கும் செயற்பாடுகள் ஒருபோதும் வெற்றியளிக்காது. இஸ்லாம் தொடர்பாக அநாவசியப் பயத்தினால் பிடிக்கப்பட்டுள்ளவர்களின் ஊதுகுழல்களாகச் செயற்படுகின் ஊடகங்களின் காட்சிகளும் காணொளிகளும் இஸ்லாம் அடிப்படைவாதத்தையும், தீவிரவாத்தையும், பயங்கரவாதத்தையும் ஊக்குவிக்கிறது என்று கூறினாலும,; ஊடகப் பயங்கரவாதம் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகச் செயற்பட்டாலும், இஸ்லாத்தின் அழைப்புக்கள் என்றும் சமாதானத்தையும் அமைதியையும் விட்டுக்கொடுப்பையும், மனித இன சகோதரத்துவதை;தையும், அகிம்சையையும் கருணையையும் கொண்டவையாகவே இருக்கின்றன. அத்துடன் அடிப்பைட வாதத்தையும், தீவிரவாததத்தையும் பயங்கரவாதத்தையும் ஒருபோதும் இஸ்லாம் ஆதரிக்கச் சொல்லவுமில்லை முஸ்லிம்களை  அவற்றில் ஈடுபட அனுமதிக்கவுமில்லை.

தீவிரவாதத்தை வெறுக்கும் இஸ்லாம்

ஒரு மதத்;தைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொண்டு, அவற்றின் நல்வழியே வாழ்க்கையை அமைத்துக்கொள்ளாது தீவிரவாதச் செயல்களிலும,; பயங்கரவாதச் செயல்களிலும் ஈடுபடுபவர்களை, ஈடுபடுத்தப்படுபவர்களை  அடிப்படையாகக் கொண்டு ஒரு மதத்தையோ, அம்மதத்தைப் போதிப்பவர்களையோ, அம்மதத்தைப் பின்பற்றுபவர்களையோ விமர்சிப்பதும் அவர்களை அவற்றுடன் தொடர்புபடுத்துவதும் அறிவுடையமையல்ல.

கொலை புரிதலின் பாதகம் பற்றி திருமறை அல்குர்ஆன் தெளிவாகவே கூறுகிறது. 'யாராவது ஒருவன், ஒரு மனிதனைக் கொன்று விட்டால் அவன் மனித இனம் முழுவதையும் கொன்றுவிட்டதற்குச் சமமாகும்'. 'அல்லாஹ் புனிதமாக்கிய உயிரை முறையான நீதி விசாரணiயின்றி கொல்லாதீர்கள';. 'ஒரு சாராரின் மீது நீங்கள் கொண்டிருக்கும் வெறுப்பு உங்களை அத்துமீறலான செயல்களுக்கு தூண்டிவிட வேண்டாம்'. 'நன்மையிலும்  பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்! பாவத்திலும் பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்'. இவ்வாறு மனிதநேயத்திற்காக, மனித உரிமைக்காக எந்தளவுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும், மனித நேயம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அழகாக போதிக்கும் அல்குர்ஆன், தீவிரவாதத்திற்கும் பயங்கரவாத்திற்கும் சாவு மணி அடிக்கிறது. தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் வெறுத்தொதுக்குகிறது. தீவிரவாதம் இஸ்லாத்துக்குச் சொந்தமுமில்லை எனச் சுட்டிக்காட்டுகிறது.

குர்ஆனின் போதனைகள் நேடியாக மனிதர்கள் என்று மனித இனத்தை நோக்கிப் கூறுகிறதே தவிர, இஸ்லாத்தை ஏற்றவர்களை மாத்திரம் குறிப்பிடவில்லை. இஸ்லாத்தை ஏற்காதவர்களையும்தான் சுட்டிக்காட்டுகிறது. மனித நேயத்தை வலியுறுத்தும் இஸ்லாம் தீவிர வாதத்தையும் பயங்கரவாத்தையும் ஒழிக்க வேண்டுமென்றே போதிக்கிறது. ஏனெனில், தீவிரவாதமும் பயங்கரவாதமும் உலக அமைதிக்கு பேரிடியாகும்.

நல்வழிகாட்டும் இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறும் ஒரு குழுவினராலோ  அல்லது இஸ்லாமியப் பெயர்களை சுமந்தவர்களினாலோ புரியப்படும், அல்லது புரியச் செய்யப்படும் கொலைகளையோ, அநியாயங்களையோ எந்தவிதத்திலும் அங்கீகரிக்க முடியாது. வன்முறைச் செயல்களினால் மனிதர்களைப் படுகொலை  செய்பவர்கள் எப்படி உண்மை முஸ்லிம்மாக இருக்க முடியும்.

இஸ்லாத்தின் முதலிரு மூலாதாரங்களான திருக்குர்ஆனும் நபிமொழியும் மிகவும் தெளிவாகவே இவ்விடயங்களைச் சுட்டிக்காட்டியிருக்கிறது.  'பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்: நீங்கள் இறைநம்பிக்கையாளர்கள் என்றால் இதுவே உங்களுக்கு நன்மையாகும்';. மேலும், 'பூமியில் குழப்பம் விளைவிக்க முனனையாதே! நிச்சமாக அல்லாஹ் குழப்பம் விளைவிப்போரை நேசிக்க மாட்டான்' என்றும் 'நீங்கள் எல்லை மீறாதீர்கள்! எல்லை மீறுவோரை அல்லாஹ் நேசிப்பதில்லை' என புனித குர்ஆன் தெளிவாகவே மனித இனத்தைப் பார்த்துக்கூறிக்கொண்டிருக்கிறது.

பூமியில் குழப்பம் விளைவித்தல் என்பது விரிவான பொருள் கொண்டதாகும். வன்முறைகள் மூலம் மனிதகுலத்தின் வாழ்க்கையைச் சீர்குலைப்பது, மக்களின் சொத்துக்களைத் தவறான வழியில் பறிப்பது, கொடுமை இழைப்பது, உயிருக்கும், உரிமைக்கும், இறைமைக்கும,; சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தலாக இருப்பது, அவற்றிற்கு சேதம் விளைப்பிப்பது, வசிப்பிடங்களைத் அழிப்பது, வசிப்பிடங்களை விட்டுத் துரத்துவது என்ற பல அர்த்தங்களை குழப்பம் என்ற சொல் விளக்கி நிற்கிறது. சுருக்கமாகச் சொல்லாப்போனால் இன்று மக்களினாலும் ஊடகங்களினாலும் எதையெல்லாம் தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம் என்று அழைக்கப்படுகிறதோ அதையே அல்-குர்ஆன் 'குழப்பம்' (ஃபஸாத்) அல்லது 'எல்லை மீறுதல'; (உத்வான்) என அழைக்கிறது.

இவ்வாறு குர்ஆனில் பல வசனங்கள் இந்தக் குழப்பம் என்ற தீவிரவாத மற்றும் பயங்கரவாதச் செயல்களுக்கு தடைவிதிப்பதாகக் கூறுகிறது.  தீவிரவாதிகளையும் பயங்கரவாதிகளையும் இறைவன் நேசிப்பதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. '(இஸ்லாமிய நாட்டில் வாழும் முஸ்லிமல்லாத) ஓர் ஒப்பந்தப் பிரஜையைக் கொள்பவன் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகரமாட்டான். அதன் வாடையோ நாற்பதாண்டு பயணத் தொலைவிலிருந்தே வீசிக்கொண்டிருக்கும';. என இறைதூர் முகம்மது நபி(ஸல்) அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

இவ்வாறு புனித குர்ஆனினதும் நபியினதும் அறிப்பானது இஸ்லாம் எந்தளவுக்கு இந்த தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் அவற்றைப் புரிகின்றவர்களையும் வெறுத்திருக்கிறது. அவர்களை நேசிக்கவில்லை என்பதை சாதாரண நபர்களினானும் புரிந்துகொள்ள முடியும்.

புனிதப்;போர்(ஜிஹாத்) என்ற நம்பிக்கையில் உலகளாவிய ரீதியில் சில குழுக்கள்; படுகுழியில் விழுந்துவிடுகின்றனர். தவறாக வழிகாட்டும் அரசியல் பயங்கரவாதிகள் செய்யும் கவர்ச்சிகரமான பிரச்சாரத்தில் மயங்கி பாவத்திற்கு சிலர் துணைபோய்விடுகின்றனர். 'இறைவனின் அன்பை வேண்டிய தலைவருக்குக் கட்டுப்பட்டு உயர்ந்த செல்வத்தை செலவிட்டு, நண்பனுக்கு ஒத்தாசை செய்து, குழப்பத்தைத் தவிர்ந்து புரியப்படும் போர்தான் புனிதபோராகும்'.  மாறாக 'பெருமைக்காவும் பெயர்புகழுக்காகவும் போர்புரிந்து, தலைவருக்கு மாற்றம் செய்து, பூமியில் குழப்பம் விளைவிப்பவர் யாரோ அவர் எந்தப் பயனையும் (அல்லாஹ்விடம்) பெற்றுத் திரும்புவதில்லை' என அழகாக நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

அத்தோடு, இஸ்லாத்திற்கும் தற்கொலை குண்டு வெடிப்புக்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. தற்கொலை செய்வதை இஸ்லாம் கடுமையாக எதிர்க்கிறது. 'உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்.' மேலும் 'நீங்கள் உங்களையே கொலை செய்து கொள்ளாதீர்கள்' என எச்சரிக்கும் அல்குர்ஆன் 'எவரேனும் அல்லாவின் வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால் விரைவாகவே நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம்' என்றும் கூறுகிறது.

இவ்வாhறு தீவிரவாத மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகள் ஊடாகப்; புரியப்படும் கொலைகள் பற்றியும் தற்கொலைகள் பற்றியும் அத்தகயை மிலேச்சத்தனமான செயற்பாடுகளுக்கும்  இஸ்லாத்திற்கும் இஸ்லாமிய புனிதப்போருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று இஸ்லாம் தெளிவாக கூறியுள்ள நிலையில், சில சர்வதேச, உள்ளுர் ஊடங்களும் இனவாதிகளும் இஸ்லாத்தை மையப்படுத்தி, முஸ்லிம்களை இஸ்லாமியத் தீவிரவாதிகள், இஸ்லாமியப் பயங்கரவாதிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்று முத்திரை குற்ற முனைவதை எந்த நீதியில் ஏற்றுக்கொள்வது.

இலங்கை முஸ்லிம்களும் பதிலளிப்பும்.

இத்தகைய இஸ்லாமிய எதிர்ப்;பாலர்களின் சங்கிலித் தொடர்களில் ஒன்றாகவே இலங்கையில் வாழும் முஸ்லிம்களையும் முஸ்லிம்களுக்கிடையே காணப்படுகின்ற கொள்கையடிப்படையிலான அமைப்புக்களையும் அடிப்படைவாத அமைப்புக்கள் என்றும் தீவிரவாதப் போக்குடையவை என்றும் காட்டுவதற்கான முயற்சிகள் பல்வேறு கோணங்களில் முன்னெடுக்கப்படுவதுடன், இந்நாட்டு முஸ்லிம்களின் அமைதியையும் சின்னபின்னமாக்குவதற்கு இனவாதம் செயற்பட்டு வருகிறது.

இந்நாட்டில் வாழுகின்ற முஸ்லிம்களின் வரலாற்றுப் பின்னணியைப் நோக்குகின்றபோது முஸ்லிம்கள் இந்நாட்டுக்கோ அல்லது இந்நாட்டில் வாழும் பிற சமூக இனங்களுக்கோ எதிராகச் செயற்பட்ட வரலாறுகள் கிடையாது. மாறாக இந்நாட்டின் சுதந்திரத்திற்காகவும் வளர்;ச்சிக்காகவும் பாடுபட்ட வரலாரே காணப்படுகின்றன.

கொழும்பின் மையப்பகுதியில் அமைந்துள்ள தேசிய நூதனைசாலை முதல் பல்வேறு நிலையங்களுக்கான காணிகள் முன்னோர்களான முஸ்லிம் செல்வந்தர்களால் வழங்கப்பட்டிருக்கின்றமையை அக்கால வரலாறுகளினூடாக காணமுடிகிறது. அதுமாத்திரமின்றி, இந்நாட்டை ஆண்ட அரசர்களுக்கு ஆபத்து வருகின்றபோது, அவர்களைக் காட்டிக்கொடுக்காது பாதுகாத்த வரலாறுகளும் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. இவ்வாறு இந்நாட்டின் கௌவரவத்தையும் இறைமையையும் பாதுகாத்து வருகின்ற முஸ்லிம்களை, அவர்களின் கொள்கைகளின் அடிப்படையில் உருவாகின்ற சிற்சில முரண்பாடுகளை காரணம்காட்டி அடிப்படைவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் அவற்றுக்கான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றவர்களாகவும் சித்தரிக்க எடுக்கின்ற முயற்சிகளைத் தகர்ந்தெரிந்து இஸ்லாம் அடிப்படை வாதத்தையோ, தீவிரவாத்தையோ, பயங்கரவாதத்தையோ அனுமதிக்கமில்லை, இவை இஸ்லாத்திற்கு சொந்தமுமில்லை. இஸ்லாத்தைப் பின்பற்றுகின்ற முஸ்லிம்கள் அடிப்படைவாதிகளும், தீவிரவாதிகளும் பயங்கரவாதிகளுமல்ல என்பதை பிற சமூகங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் சார்ந்தது.

இதற்காக அனைத்து முஸ்லிம்களும் வேற்றுமைகளை மறந்து ஒன்றுபடுவதும் ஒருமித்த கருத்துக்களின் அடிப்படையில் தெளிவுபடுத்துவதும். அதற்காகச் செயற்படுவதும் காலத்தின் தேவையாகும். பிளவுபட்ட சமூகம், காட்டிக்கொடுக்கும் சமூகம், என்ற  அவப்பெயர்களைச் சுமக்கச் செய்யும் கைங்கரியங்களிலிருந்து விடுபட்டு, இஸ்லாத்தின் கண்ணியத்தையும், அதன் வழிகாட்டல்களையும் வாழ்க்கையாகக் கொண்டு ஒன்றுபட்டு இஸ்லாத்தின் கௌரவத்தையும் முஸ்லிம்களின் இருப்பையும், எதிர்கால சந்ததியினரையும் பாதுகாத்துக் கொள்வோமாக!
தீவிரவாதம் இஸ்லாத்துக்குச் சொந்தமில்லை.. தீவிரவாதம் இஸ்லாத்துக்குச் சொந்தமில்லை.. Reviewed by Madawala News on 11/24/2016 01:10:00 PM Rating: 5