அமைச்சர் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழாவின் கவியரங்கு நிகழ்வு..


இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழாவின் கவியரங்கு நிகழ்வு இன்று (26) மாலை மருதமுனை அல் - மனார் வளாகத்தில் கவிஞர் திலகம்  அஸ்ரப் அரங்கில் நடைபெற்றது.  இக்கவியரங்கு நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம்  நடைபவனியாக மாணவர்களின்  பொல்லடிகளுடனும், ரப்பான் வாத்தியங்களுடனும் கவிஞ்சர்களாலும், தமிழ் இலக்கியவாதிகளாலும் அரங்கத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

கவியரங்கு ஆரம்பிக்கும் முன்பு இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழாவின் நினைவுத்தூபி ஒன்று தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழ் இலக்கிய மாநாட்டினை முன்னின்று நடாத்திய கவிஞ்சர் ஹஸன் மௌலானா அவர்களினால்  பொன்விழா ஆரம்ப உரை நிகழ்த்தப்பட்டது.


மூத்த கவிஞர்களின் முத்தெடுத்து எனும் தலைப்பில் கவிஞர் திலகம் அஷ்ரப் கவி அரங்கு ஒன்று நடைபெற்றது. கவிஞர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இக்கவியரங்கில் கிண்ணியா சபருள்ளா, எஸ். நளீம், மருதமுனை ஹஸன், நவாஸ் சௌபி, நபீல், முல்லை முஸ்ரிபா, தவம், எஸ். ஜனூஸ் ஆகியோர்கள் பங்கேற்றனர்.

-    ஷபீக் ஹுஸைன், சாய்ந்தமருது இக்பால்- 


அமைச்சர் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழாவின் கவியரங்கு நிகழ்வு.. அமைச்சர் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழாவின் கவியரங்கு நிகழ்வு.. Reviewed by Madawala News on 11/26/2016 08:14:00 PM Rating: 5