Free Space

ரவி கருனாநாயக்கவுக்கு எதிராக லஞ்சம் மற்றும் ஊழல் விசாரனை ஆணைக்குழுவில் முறைப்பாடு ...


வாகனங்கள் இறக்குமதி தீர்வை வரி சலுகை பெற்றுக்கொடுத்து நாட்டுக்கு வரி இழப்பு செய்தாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மீது கூட்டு எதிர்கட்சி உறுப்பினர் லஞ்சம் மற்றும் ஊழல் விசாரனை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

நல்லாட்சி அரசாங்கத்திலுள்ள மாபெரும் ஊழல் பேர்வழிகள் 10 பேரினால் (டொப் டென்)  நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நட்டம் 32 பில்லியன் ரூபா என கூட்டு எதிர்க் கட்சி இன்று அறிவித்துள்ளது.

இந்த பத்து அமைச்சர்களில் இரண்டாவது நபருடைய பெயரை இன்று அக்கட்சி வெளியிட்டுள்ளது.

இந்த பத்துப் பேரில் முதலாவது நபர் எமது பிரதமர். இவருக்கு எதிராக நாம் ஏற்கனவே லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாட்டை முன்வைத்துள்ளோம். 

இன்று இரண்டாவது நபரான நிதி அமைச்சருக்கு எதிராக முறைப்பாட்டை ஆணைக்குழுவில்  பதிவு செய்துள்ளோம் என கூட்டு எதிர்க் கட்சியின் எம்.பி. மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

இந்த முறைப்பாடுகள் மிக விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தாம் எதிர்பார்ப்பதாகவும்  இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது  அவர் குறிப்பிட்டார்.

ரவி கருனாநாயக்கவுக்கு எதிராக லஞ்சம் மற்றும் ஊழல் விசாரனை ஆணைக்குழுவில் முறைப்பாடு ... ரவி கருனாநாயக்கவுக்கு எதிராக லஞ்சம் மற்றும் ஊழல் விசாரனை ஆணைக்குழுவில் முறைப்பாடு ... Reviewed by Madawala News on 11/09/2016 08:23:00 PM Rating: 5