Kidny

Kidny

நீதியமைச்சரின் உரை நாட்டை தவறாக வழிநடாத்துகிறது


பாரா­ளு­மன்­றத்தில் கடந்த 17 ஆம் திகதி உங்­களால் ஆரா­யாமல் வெளி­யி­டப்­பட்ட கருத்­துகள் தொடர்பில் முஸ்லிம் சமூகம் கடு­மை­யான ஆட்­சே­பத்தை தெரி­வித்துக் கொள்­கி­றது.

உங்­க­ளது பொருத்­த­மற்ற சம்­பந்­த­மில்­லாத கருத்­துகள் பல முஸ்லிம் அமைப்­புகள் மற்றும் முஸ்லிம் சமூ­கத்தை கஷ்­டத்­திலும் அவ­தூ­றிலும் சிக்­க­வைத்­துள்­ளன என தேசிய சூரா கவுன்ஸில் நீதி­ய­மைச்சர் விஜே­தாஸ ராஜபக் ஷவுக்கு அனுப்பி வைத்­துள்ள பகி­ரங்க கடி­தத்தில் தெரி­வித்­துள்­ளது.

தேசிய ஷூரா சபையின் தலைவர் தாரிக் மஹ்மூத் நீதி­ய­மைச்­ச­ருக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­தி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார். 

நீதி­ய­மைச்சர் ஐ.எஸ். தீவி­ர­வா­தத்­துடன் இலங்கை முஸ்­லிம்­களை தொடர்­பு­ப­டுத்தி ஆற்­றிய உரை தொடர்­பா­கவே இந்த பகி­ரங்க கடிதம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

அக் கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது

அச்­ச­மூட்டும் உங்­க­ளது கருத்­துகள் அனைத்து சமூ­கங்கள் மத்­தி­யிலும் பதற்ற நிலை­யினை உரு­வாக்­கி­யுள்­ளது. சமா­தா­னத்­துக்கு இது பாதிப்­பாக அமைந்­துள்­ளது. 

அர­சாங்­கத்­துக்கு எதி­ரா­ன­வர்கள் நாட்டில் பௌத்த, முஸ்லிம் மோதல்­களை ஏற்­ப­டுத்தி அர­சாங்­கத்தை வீழ்த்­து­வ­தற்­கான முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­வ­தாக ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் மக்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார்கள்.

உங்­க­ளது உரை இந்­நாட்டின் இன தீவி­ர­வா­தி­களின் கரங்­களைப் பலப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ளது. இத­னை­ய­டுத்து கண்டி போன்ற இடங்­களில் இன­வாத ஆர்ப்­பாட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

பொறுப்­புள்ள அமைச்சர் ஒருவர் என்ற வகையில் பாரா­ளு­மன்­றத்தில் மக்கள் பிர­தி­நி­தி­க­ளுக்கு மத்­தியில் உரை­யாற்­றி­யி­ருக்­கி­றீர்கள். அவர்கள் நீங்கள் கூறிய விட­யங்கள் தொடர்­பான திகதி, இடம் மற்றும் பெயர்­களை அறிந்து கொள்ள விரும்­பு­கி­றார்கள். விப­ரங்­களை அறிந்து கொண்டு பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு பெற்­றுக்­கொள்ள விரும்­பு­கி­றார்கள். 

நீங்கள் பொறுப்பு வாய்ந்த சில அமைப்­பு­களின் பெயர்­களைக் குறிப்­பிட்­டுள்­ளீர்கள். வெளி­நாட்­டி­லி­ருந்து இலங்­கைக்கு வருகை­தரும் முஸ்லிம் விரி­வு­ரை­யா­ளர்கள் சர்­வ­தேச முஸ்லிம் பாட­சா­லை­களில் தீவி­ர­வா­தத்தை போதிப்­ப­தாகக் குற்றம் சுமத்­தி­யுள்­ளீர்கள். 
மாறு­பட்ட கொள்­கை­களைக் கொண்ட மதப் பிரி­வு­களும் குழுக்­களும் ஒரு­வ­ருக்­கொ­ருவர் முரண்­பட்டுக் கொள்­வ­தாகத் தெரி­வித்­துள்­ளீர்கள். ஒருவர் இளம் பெண் ஒரு­வரை திரு­மணம் செய்­துள்­ளமை, இன ரீதி­யி­லான மோதல்­க­ளையும் இனங்­க­ளுக்கு இடையில் வேற்­று­மை­க­ளையும் ஏற்­ப­டுத்­து­மென கூறி­யி­ருக்­கி­றீர்கள்.

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் 4 முஸ்லிம் குடும்­பங்கள் இணைந்­துள்­ள­தா­கவும் இதில் 32 ஆண்/ பெண் சிறு­வர்கள் அடங்­கி­யுள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டுள்­ளீர்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­பினால் கொலைகள் அதி­க­ரித்து காணப்­பட்ட காலத்தில் அவர்­களை யார் பயிற்­று­வித்­தது. யார் நிதி உத­வி­ய­ளித்­தது என்­பதை முழு உல­கமும் அறியும். இஸ்­ரேலைப் பாது­காப்­ப­தற்­காக சிரி­யாவை அழிக்க வேண்டும் என்­பதே அவர்­க­ளது இலக்­காகும். ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்­பாக உங்­க­ளுக்கு அறியக் கிடைக்­காத சில­வற்றை உங்கள் கவ­னத்­திற்குக் கொண்­டு­வர விரும்­பு­கிறேன்.

2015 ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ். விவ­காரம் ஊட­கங்­களில் சூடு­பி­டித்­தி­ருந்த வேளை பிர­தமர் ஒரு கூட்­டத்தை ஏற்­பாடு செய்­தி­ருந்தார். இந்தக் கூட்­டத்தில் முஸ்லிம் சிவில் அமைப்­புகள், சிரேஷ்ட அமைச்­சர்கள், பாது­காப்புச் செய­லாளர், முப்­ப­டை­களின் தள­ப­திகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் உளவுப் பிரிவின் அதி­கா­ரிகள் கலந்து கொண்­டனர். நானும் கூட்­டத்தில் தேசிய சூரா கவுன்­ஸிலைப் பிர­தி­நி­தி­த்து­வப்­ப­டுத்திக் கலந்து கொண்டேன். இந்தப் பிரச்­சி­னைக்கு நாம் உயர்­மட்ட நிலையில் தீர்வு கண்டோம்.

அர­சாங்­கத்­திற்கும் இரா­ணு­வத்­திற்கும் சட்டம் ஒழுங்கு நிலை நாட்டும் அதி­கா­ரி­க­ளுக்கும் எமது ஒத்­து­ழைப்­பினை வழங்­கினோம்.

உங்­க­ளது உரையில் நீங்கள் மக்கள் பிர­தி­நி­தி­க­ளுக்கு புரி­யக்­கூ­டிய விப­ரங்­களை வழங்­க­வில்லை. சம்­பந்­த­மில்­லாத, பொருத்­த­மற்ற பழைய மிகைப்­ப­டுத்­தப்­பட்ட விப­ரங்­களே கூறப்­பட்­டன.

இவை இனப் பிரச்­சி­னை­களை உரு­வாக்­கு­ப­வர்­க­ளுக்கு சாத­க­மாக அமைந்­து­விட்­டது. உங்­க­ளது உரை அர­சாங்கம் அபி­வி­ருத்தி மேற்­கொள்­வ­தற்கு மேற்­கொண்­டி­ருக்கும் முயற்­சி­க­ளுக்கு பாத­க­மாக அமையும் என்­பதை அறி­வீர்­களா? உங்கள் உரை நாட்டின் நல்­லி­ணக்க முயற்­சி­க­ளுக்கு பாதிப்­பாக அமை­யு­மென அறி­வீர்­களா? 

நல்­லாட்சி அர­சாங்­கத்தில் நீங்கள் ஏன் இவ்­வா­றான உரையை தெரிவு செய்­தீர்கள் என்று எமக்குப் புரி­யா­ம­லுள்­ளது.

நீங்கள் ஆற்­றிய உரை தொடர்பான விபரங்கள் உங்களுக்கு உரிய முறையில் வழங்கப்படவில்லை. தரவுகளும் திகதிகளும் விளக்கங்களும் சரியாக வழங்கப்படவில்லை என நாம் கருதுகிறோம்.

உங்களுக்கு தகவல்களை வழங்கியவர்கள் மிகவும் கவனமாக தகவல்களைத் திரட்டி கையளிக்கவில்லை.

இது தொடர்பாக நாங்கள் கவலைப்படுகிறோம். நாம் உங்களுடன் இணைந்து கடமையாற்ற விரும்புகிறோம். எமது தாய் நாட்டின் நன்மைக்காக எமது ஒத்துழைப்புகளை வழங்கத் தயாராக இருக்கிறோம்என அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதியமைச்சரின் உரை நாட்டை தவறாக வழிநடாத்துகிறது நீதியமைச்சரின் உரை நாட்டை தவறாக வழிநடாத்துகிறது  Reviewed by Madawala News on 11/22/2016 03:33:00 PM Rating: 5