முஸ்லிம்கள் விழிப்பாகவும் நிதானமாகவும் நடந்துகொள்வோம்..


இன்று நாட்டிலுள்ள சூழ்நிலையைப் புரிந்து கொண்டு முஸ்லிம்கள் மிக விழிப்பாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும். தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர், அடுத்த இலக்காக முஸ்லிம்கள் குறிவைக்கப்பட்டிருப்பதை கடந்த ஆட்சிக்

காலத்தில் நாம் நேரடியாக அவதானித்தும் அனுபவத்தும் வந்துள்ளோம்.

ஆட்சி மாற்றம் இடம்பெற்ற பின்னரும், ஆங்காங்கே சிறு சிறு சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டேதான் இருக்கின்றன. அதாவது, முஸ்லிம்கள் மீதான இலக்கு இன்னும்
முடிந்த பாடில்லை என்பதையே இவை பறைசாட்டி வருகின்றன.அதிலும் குறிப்பாக, இரண்டு வாரங்களாக நாட்டில் இடம்பெற்று வரும் சம்பவங்களும், திட்டமிட்ட நடவடிக்கைகளும் ஒரு சிங்கள – முஸ்லிம் கலவரத்திற்கு தூபமிடப்படுவதைப் போன்றுள்ளது. ஆகவே, முஸ்லிம்கள் இந்த நெருக்கடியான சூழ்நிலையை மிகக்கவனமாகக் கடக்க வேண்டிய தேவை இருக்கிறது.

அதனால், என்ன விடயங்கள் நடந்தாலும் அதனை நிதானத்துடன் கையாள வேண்டியதுடன்,வதந்திகள் மற்றும் வீணாகப் பரப்பப்படும் தகவல்கள் என்பவற்றைக் கண்டு உணர்ச்சிவசப்படாமல் இருந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக, சமூக வலைத் தளங்களில் வீணான செய்திகளையோ அல்லது மிகப்படுத்தல்களையே
பதிவேற்றாமல், தீர ஆராய்ந்து பதிவேற்றங்களை இடுமாறு அனைத்து நண்பர்களையும் கனிவாக வேண்டிக்கொள்கிறேன்.

அது மாத்திரமல்லாமல், ஆத்திரமூட்டும் வார்த்தைகள் மற்றும் பிற இனங்களை இம்சிக்கும் வகையிலான வசனங்களையும் தவிர்ந்து கொள்ளுமாறு உங்கள் சகோதரனாக அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோன்று, வீணாக முஸ்லிம் தலைமைகளை விமர்சிக்காமல், அவர்களை முஸ்லிம்களை பாதுகாப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தூண்டும் வகையிலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கூறுங்கள். எல்லா முஸ்லிம் தலைமைகளும் முஸ்லிம்களைப் பாதுகாக்கின்ற விடயத்தில் ஒன்றுபட்டுச் செயற்பட அழைப்பு விடுங்கள்.

அல்லாஹ்வைப் பிரார்த்தியுங்கள். அவனே எல்லாவற்றிற்கும் போதுமானவன். அல்லாஹ் கரீம்.

முஸ்லிம்கள் விழிப்பாகவும் நிதானமாகவும் நடந்துகொள்வோம்.. முஸ்லிம்கள் விழிப்பாகவும் நிதானமாகவும் நடந்துகொள்வோம்.. Reviewed by Madawala News on 11/20/2016 06:12:00 PM Rating: 5