பாகிஸ்தான் மண்ணை தோண்டினாலும் புத்தர் சிலைகள் வெளிப்படும் ..


எமது விருப்பத்துக்கு இந்த நாட்டில் புத்தர் சிலை வைப்பதை தடை செய்வதாக இருந்தால் இந்த அமைச்சு பதவியை விட்டுவிட்டு வீட்டுக்கு செல்வேன் என அமைச்சர் தயாகமே குறிப்பிட்டுள்ளார்.

இன்று இடம்பெற்ற அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை எதிர்கட்சி தலைவர் எம் எஸ் உதுமா லெப்பை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் ஆகியோர் கேள்வி எழுப்பிய போது   அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்...

இந்த சிலைவைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் இப்போது வரை நான் அறிந்திருக்கவில்லை.

இலங்கையில் உள்ள விகாரைகளில் ஒரு நாளைக்கு 100-200 புத்தர் சிலைகள் வைக்கப்படுகின்றன.இலங்கை அரசியல் அமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தை சர்வ மதகுருமார்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த நாட்டின் ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையும் அதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையின் புராதன வரலாற்றை பார்த்தால் திகவாபி விகாரை கல்வெட்டில் தீகவாபி விகாரைக்கு சொந்தமாக அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள 12000 ஹேக்கர் காணி இருந்துள்ளது.அதாவது பொத்துவில் கல்முனை உள்ளிட்ட பிரதேசங்கள் கூட தீகவாபி விகாரைக்கு சொந்தமானதாக இருந்துள்ளது.

இலங்கையில் உள்ள சரித்திர முக்கித்துவம் வாய்ந்த இடங்களில் இள்ள காடுகளை தோண்டினால் புத்தர் சிலை வெளிப்படும்.
பாகிஸ்தானில் நிலத்தை தோண்டினாலும் புத்த சிலையே வெளிப்படும். அங்கு புத்தரின் சிலைகளை அங்கு முஸ்லீம்கள் பாதுகாக்கிறார்கள்.நான் கடந்த வருடம் அங்கு வெசாக் கொண்டாட்டங்களுக்காக சென்ற போது அதனை அவதானித்தேன்.

ஆகவே இந்த புத்தர் சிலை தொடர்பில் நீங்கள் அலட்டிக்கொள்ள தேவையில்லை இந்த நாட்டில் அனைவரும் சகோதர்த்துடன் அவர்களது மதவிடயங்களை முன்னெடுக்கலாம் என குறிப்பிட்டார்.

 அங்கு கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் கும்பிட ஆள் இல்லாத ஊருக்கு எதற்கு புத்தர் சிலை என கேள்வி எழுப்பிய போது அதற்கு பதில் அளித்த அமைச்சர் தயா 

இந்த நாட்டில் புத்தர் சிலைவைக்க தடை செய்ய பேசுவதாக இருந்தால் அது பிழையானது.நாம் அனைத்து மதங்களையும் மதிக்கிறோம்.ஆனால் இந்த புத்தர் சிலையை அகற்ற கோரினால் நான் அதற்கு உடன்படமாட்டேன் இந்த பதவியை துறந்துவிட்டு வீட்டுக்கு போவேன் ,புத்தர் சிலை எங்கு வைக்கிறார்கள் என்பது எனக்கு தேவையில்லாத விடயம் நான் ஆனால் அதனை அகற்ற என்னால் உடன்பட முடியாது என அவர் திட்டவட்டமாக் குறுப்பிட்டார்.




பாகிஸ்தான் மண்ணை தோண்டினாலும் புத்தர் சிலைகள் வெளிப்படும் .. பாகிஸ்தான்  மண்ணை தோண்டினாலும்  புத்தர் சிலைகள் வெளிப்படும் .. Reviewed by Madawala News on 11/07/2016 10:34:00 PM Rating: 5