Ad Space Available here

சம்பிக்க போன்ற இனவாத சக்திகள் அரசாங்கத்தின் உள்ளே இருக்கும் வரை முஸ்லீம் சமூகத்திற்கு விமோசனம் கிடைக்கப்போவதில்லை ..


-எஸ்.அஹமட் -
சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட இனவாத சக்திகள் அரசாங்கத்தின் உள்ளே பெரும் சக்திகளாக இருந்துகொண்டுள்ள போது எமது சமூகத்திற்கு ஒரு போதும் விமோசனம் கிடைக்க போவதில்லை என முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் குறிப்பிட்டார்.

சமகால அரசியல் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அங்கு கருத்து வெளியிட்ட அவர் ..

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ காலத்தில் ஹலால் தொடக்கம் முஸ்லீம் பெண்களின் கலாசார உடை உள்ளிட்ட அனைத்து சர்ச்சைகளையும் கிளப்பிவிட்ட சம்பிக்க போன்ற இனவாத சக்திகள் அரசாங்கத்தின் உள்ளே தீர்மானிக்கும் சக்திகளாக  இருந்துகொண்டிருக்கும்  போது எமது சமூகத்திற்கு ஒரு போதும் விமோசனம் கிடைக்க போவதில்லை என்பதை நாம் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

தற்போது நாட்டில் இடம்பெறும் இனவாத செயற்பாடுகள்  அனைத்தும் ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழே நடைபெறுகின்றன.
மேற்குலகின் கை பொம்மையான பிரதமர் ஊடாக  இந்தியாவின் ரோ , மேற்குலக சக்திகள் இங்கு அரங்கேற்றுகின்றன.

இலங்கை முஸ்லீம்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற  வடகிழக்கு இணைப்பு, அதிகாரப்பகிர்வு, தொகுதிவாரி தேர்தல் முறை ஆகியவற்றுக்கு எதிராக முஸ்லீம்கள் வலுவான கோஷங்களை முன்வைக்கபட்டபோது இறக்காமத்தில் திடீர் சிலை முளைத்தது அதனை தொடர்ந்து கிழக்கில் தமிழ் முஸ்லீம் உறவு வழுவடைய வேண்டும் என்ற செய்தி மறைமுகமாக வலியுருத்தப்பட்டு வருகிறது.

எதிர்வரும் சனி மட்டுவில் இடம்பெறவுள்ள சிங்கள கடும்போக்கு ஒன்று கூடல் மூலமும் இவர்கள் செல்லவரும் செய்தியும் பின்னனியும் இதுவாகத்தான இருக்கப்போகிறது.

சிங்கள கடும்போக்கை தமிழர்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு பொது எதிரியாக சித்தரித்து அதனூடாக முஸ்லீம்களுக்கு தனியலகு வடகிழக்கு இணைப்பு போன்ற விடயங்களுக்குள் முஸ்லீம்களை தள்ளிவிடும் ஒரு நிகழ்ச்சி நிரலை தற்போது ரனில் விகரமசிங்க செய்து வருகிறார்.

ரனில் விக்ரமசிங்க தொடர்பில் நன்கு அறிந்து வைத்திருந்த எமது மறைந்த தலைவர் அப்போதே அவரோடு கூட்டணி சேர்வதில் இருந்து தவிர்ந்துவந்தார் என குறிப்பிட்ட அவர்..

அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்...

கடந்த ஞாயிறு வீரகேசரி தேசிய பத்திரிகையில் ஏ எல் எம் நிப்ராஸின் "மாற்றம் வேண்டும்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. அந்த கட்டுரையில் ஒரு கதை சொல்லப்பட்டிருந்தது.

அதாவது ,

ஒரு வீட்டிலுள்ள கிணற்றில் பூனையொன்று விழுந்து இறந்து விட்டது.அதனால் வீட்டுக்காரருக்கு பெரும் அசூசையாகிப் போய்விட்டதாம்.உடனே தான்சார்ந்த மதப் போதகரிடம் போய் இவ்விடயத்தைச் கூறிய போது அவர் '50 வாளி தண்ணீரை இறைக்குமாறு' அறிவுரை கூறினாராம். 

அவ்வாறே வீட்டுக்காரரும் செய்துள்ளபோதும் நாற்றம் போகவில்லை. திரும்பவும் போய் சொன்னபோது '100 வாளி தண்ணீரை இறைத்து கொஞ்சம் குளோரின் போடுங்கள்' என்று போதகர் கூறினாராம் ஆனால் அப்படிச் செய்தும் நாற்றம் போகவில்லை.பிறகு நீர் இறைக்கும் வாளியை மாற்றிப் பார்த்தார்கள். எதுவுமே சரிவரவில்லை. வீட்டுக்காரர் கடுங்கோபத்துடன் மார்க்க போதகரிடம் போய், முழு விபரங்களையும் மீண்டும் சொன்னார்.

அப்போது, ஏதோ சிந்தனை வந்தவரான போதகர் வீட்டுக் காரரிடம் கேட்டார், 'அது சரி, பூனையை வெளியில் எடுத்து விட்டீர்களா?' என்று. 

இப்படித்தான் இலங்கை அரசியலின் நிகழ்கால நிதர்சனமும் இருந்து கொண்டிருக்கின்றது. ஆட்சியில் 'மாற்றத்தை' ஏற்படுத்துவதாகச் சொல்லி நாம் வாளிகளை மாற்றிக் கொண்டிருக்கின்றோம் அல்லது நீரை மட்டும் இறைத்துக் கொண்டிருக்கின்றோம். 

அதற்குக் காரணமான பூனை இன்னும் அப்படியே உள்ளே கிடப்பதால் அதாவது இன ரீதியாக சிந்திக்கும் மனநிலையில் மாற்றம் ஏற்படாமையால் தேசிய நீரோட்டம் தூய்மையானதாக மாற்றம் பெறவில்லை என்ற விடயத்தை ஒரு கதையுடன் நிப்ராஸ் மிக அழகாக தெளிவுபடுத்தியிருந்தார்.

ஆகவே மேற்சொன்ன கதையில் வரும்  பூனையை ஒத்த ரனில் தலைமையில் சம்பிக்க போன்ற இனவாத சக்திகள் அரசாங்கத்தின் உள்ளே இருந்துகொண்டுள்ளது.அந்த இனவாத சக்திகள் வெளியே எடுத்து வீசப்படும்  வரை எமது சமூகத்திற்கு ஒரு போதும் விமோசனம் கிடைக்க போவதில்லை என முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் மேலும் குறிப்பிட்டார்.

சம்பிக்க போன்ற இனவாத சக்திகள் அரசாங்கத்தின் உள்ளே இருக்கும் வரை முஸ்லீம் சமூகத்திற்கு விமோசனம் கிடைக்கப்போவதில்லை .. சம்பிக்க போன்ற இனவாத சக்திகள் அரசாங்கத்தின் உள்ளே இருக்கும் வரை முஸ்லீம் சமூகத்திற்கு விமோசனம் கிடைக்கப்போவதில்லை .. Reviewed by Madawala News on 11/30/2016 12:30:00 PM Rating: 5