கொக்கரிக்கும் கோழிகளாகி போன முஸ்லீம் அரசியல்வாதிகள் ...

இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து முஸ்லிம்கள் பெரும்பான்மை கட்சிகளுடன் சேர்ந்துகொண்டு இனங்கிய அரசியலைத்தான் செய்து வந்தார்கள்.அதனூடாக சில அரசியல் ஆதாயங்களை அடைந்து வந்தார்கள் என்பதையும் நாம் அறிவோம்.

அப்படி இனங்கிய அரசியல் செய்துகொண்டு வரும்போதுதான், தமிழர்களுடைய ஆயுத போராட்டம் ஆரம்பித்தது. ஆயுதத்தை ஏந்தியவர்கள்  முஸ்லிம்களையும் அடக்கி ஒடுக்க வேண்டும் என்ற கீழ்த்தரமான என்னம் வந்தபோது , முஸ்லிம்களை அவர்கள் நரவேட்டையாடினார்கள்.

அந்த சந்தர்ப்பத்தில் இனங்கிய அரசியல் செய்துகொண்டிருந்த முஸ்லிம் அரசியல் வாதிகள் பேசா மடந்தைகளாக இருந்தனர்.

அதற்கு, அப்போது இருந்த முஸ்லிம் தலைவர்கள் , இப்போது முஸ்லிம்களின் காவலர்கள் என்று கூறிக்கொண்டிருப்பவர்கள் கூறும் காரணத்தைத்தான்,  அப்போது அவர்கள் கூறிக்கொண்டிருந்தார்கள்.

அப்போதுதான் முஸ்லிம் காங்கிரஸ் உதயமாகின்றது.

அவர்கள் என்ன கூறினார்கள்,  நாங்கள் பட்டம் பதவிகளுக்கு ஆசைபடமாட்டோம் தனித்து நின்று குரல் கொடுப்போம், எந்த ஆட்சியாளர்களிடமும் சோரம் போகமாட்டோம், எதிர்க்கட்சியில் இருந்து இயன்றவரை போராடுவோம் என்று கூறி, அல்லாஹு அக்பர் என்ற கோசத்தோடு வந்தார்கள்.

அதனால் மக்கள் அவர்களை ஆதரித்தார்கள்.வந்த வேகத்தில்,அதன் தலைவர் அஸ்ரப் அவர்கள், முழுதாக இல்லாவிட்டாலும் ஓரளவேனும் தனது கடமையைச் சரியாக செய்தார் அதனால் சில நண்மைகளும் கிடைத்தன.

அவருடைய மரணத்துக்கு பின் வந்தவர்கள்,
இந்த கட்சியின் நோக்கத்தை குழிதோண்டி புதைத்து விட்டு, அஷ்ரபுக்கு முந்திய முஸ்லிம் உறுப்பினர்கள் செய்ததையே இவர்களும் செய்கின்றார்கள்.

அப்படி என்றால் இவர்கள் தேவையில்லையே,!

முந்திய முஸ்லிம் அரசியல்வாதிகள் பெரும்பாண்மை கட்சிகளோடு சேர்ந்து கொண்டு பெற்ற, எந்த அபிவிருத்தியையோ, அல்லது உரிமையையோ, இவர்கள் அவர்களை விட கூடுதலாக பெற்றார்களா என்றால் அது கேள்விக்குறிதான்.

அன்று தமிழ் பயங்கரவாதிகளினால் நடந்த கொடுமைகளை விட இப்போது சிங்கள இனவாதிகளினால் கூடுதல் அநியாயங்கள் நடக்கின்றன.இதனை தட்டிக்கேட்பதற்கு, சிங்கள அரசியல் வாதிகளிடம் பதவிக்கும், பட்டத்துக்கும், பணத்துக்கும் சோரம் போயிருக்கும் இந்த அடிமைகளினால் முடியாமல் இருக்கின்றது.

இதனால் முஸ்லிம் சமூகம் இலக்கு தவறி பயனிக்கின்றது.தனித்து குரல் கொடுப்போம் என்று வந்தவர்கள் தடம்புரண்டு நிற்பதனால், முஸ்லிம் சமூகம் அனாதையாக வீதியில் நின்று அடிவாங்கிக்கொண்டுள்ளது.

உண்மையிலேயே நாம் இனவாதக்கட்சியை ஆரம்பித்ததனால்தான் சிங்கள சமூகங்களுக்குள், அன்னியோன்யமாக வாழ்ந்த முஸ்லிம் மக்களை, இனவாதிகள் இலேசாக வேட்டையாடுகின்றார்கள்.

இனப்பிரச்சினை என்று வரும்போது, சிங்கள அரசியல் வாதிகள் முஸ்லிம் மக்களுக்காக பரிந்து பேச முன்வருவதில்லை.காரணம், அரசியல் என்று வரும்போது முஸ்லிம்கள் இனரீதியாக சிந்தித்து அவர்களுடை இன உறுப்பினர்களுக்கே வாக்களிப்பார்கள்,
இப்படிப்பட்ட இவர்களினால் எமக்கு எந்த பிரயோசனமும் இல்லை.அதனால் இவர்கள் பாதிக்கப்பட்டால்தான் நமக்கு என்ன என்ற நினைப்பில் சிங்கள அரசியல் வாதிகள் இருந்துவிடுகின்றார்கள்.

ஆகவே,முஸ்லிம் கட்சி என்று பெயரை வைத்துக்கொண்டு எதையுமே நாம் இதுவரை சாதிக்கவில்லை.

அபிவிருத்தியிலும் உரிமையிலும் நாம் புறம் தள்ளப்படுகின்றோம்.இவர்களினால் எந்த லாபமும் முஸ்லிம் சமூகம் பெறவில்லை. மாறாக முஸ்லிம் அரசியல் வாதிகள் அவர்களுடைய சுகபோகங்களைத்தான் அனுபவிக்கின்றார்கள்..

அப்படிப் பார்க்கப்போனால், இவர்களை விட முன்னய அரசியல் வாதிகள் பின்பற்றிய முறையே மேலானது எனலாம்.அவர்கள் யாரையும் பகைத்துக்கொள்ளாமல் நிறைய விடயங்களை சாதித்துள்ளார்கள்...

ஆமை சத்தம் போடாமல் ஆயிரம் முட்டையிடும்....

கோழி கொக்கரித்து விட்டு ஒரு முட்டைதான் இடும்.....

நமது சமூகம்,... கோழி கொக்கரிக்கும் வேகத்தை பார்த்து ஆயிரம் முட்டையாவது இடும் என்ற நப்பாசையில், நாதியற்றுக் கிடக்கின்றது.

இதுதான் உண்மையாகும்...


கொக்கரிக்கும் கோழிகளாகி போன முஸ்லீம் அரசியல்வாதிகள் ... கொக்கரிக்கும் கோழிகளாகி போன முஸ்லீம் அரசியல்வாதிகள் ... Reviewed by Madawala News on 11/27/2016 09:46:00 PM Rating: 5