Accaddemy

இழுத்தடிப்புச் செய்யப்படுவது ஏன்?



(எம்.ஜே.எம் சஜீத்)
கிழக்கு மாகாணத்தில் வாழும் மூவின மக்களின் நலன் கருதி கிழக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சராக நான் பதவி வகித்த போது 2010ஆம் ஆண்டில் பொத்துவில் பிரதேசத்திற்கான நீர்ப்பாசன உப காரியாலயமும், குச்சவெளிப் பிரதேசத்திற்கான நீர்ப்பாசன உப காரியாலயமும், மூதூர் பிரதேசத்திற்கான நீர்ப்பாசன உப காரியாலயமும் அமைக்கப்பட்டு கடந்த 07 வருட காலமாக சிறந்த முறையில் இயங்கி வருவதுடன் கிழக்கு மாகாணத்தில் வாழும் விவசாயக் குடும்பங்களின் வருமான அதிகரிப்புக்கும் உறுதுணையாக அமைந்தன.

இம்மூன்று மாகாண நீர்ப்பாசன உப காரியாலயங்களையும், நீர்ப்பாசன காரியாலயங்களாக தரம் உயர்த்துவதன் ஊடாக மேலும் சிறந்த சேவையினை வழங்கலாம் என்பதனைக் கருத்தில் கொண்டு குறித்த 03 நீர்ப்பாசன உப காரியாலயங்களையும் நீர்ப்பாசன காரியாலயங்களாக தரம் உயர்த்துவதற்கு கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவையில் 2014ஆம் ஆண்டு விசேட அமைச்சரவையில் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு முதற்கட்டமாக பொத்துவில், குச்சவெளி உப நீர்ப்பாசன காரியாலயங்களை நீர்ப்பாசன காரியாலயங்களாக தரம் உயர்த்துவதற்கான அனுமதியினை வழங்கியதுடன் அடுத்த கட்டமாக மூதூர் நீர்ப்பாசனத உப காரியாலயத்தை நீர்ப்பாசன காரியாலயமாக தரம் உயர்த்துவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

பொத்துவில், குச்சவெளிப் நீர்ப்பாசன உப காரியாலயங்களை நீர்ப்பாசன காரியாலயங்களாக தரம் உயர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் கிழக்கு மாகாண சபையின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன அமைச்சின் ஆலோசனைக் கூட்டங்களிலும், கிழக்கு மாகாண சபையிலும் இக்காரியாலயங்களை நீர்ப்பாசன காரியாலயங்களாக தரம் உயர்த்துவதற்கான விசேட தனிநபர் பிரேரணை சமர்ப்பித்த போது விரைவில் இக்காரியாலயங்களை நீர்ப்பாசன காரியாலயங்களாக தரம் உயர்த்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்ட போதும் இன்னும் இந்த விடயம் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இக்காரியாலயங்களை தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் நிறைவு பெற்றும் இதுவரையும் இக்காரியாலயங்கள் நீர்ப்பாசன காரியாலயங்களாக தரம் உயர்த்தப்படவில்லை.

எனவே, எதிர்வரும் 29.11.2016ம் திகதியன்று நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபையின் 66வது அமர்வில் கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன அமைச்சரிடம் குறித்த 03 உப நீர்ப்பாசன காரியாலயங்களும் நீர்ப்பாசன காரியாலயங்களாக தரம் உயர்த்துவதற்கான தடைகள், காரணங்களை கிழக்கு மாகாண சபையில் தெரிவிக்க வேண்டும் எனவும், இவ்விரு காரியாலயங்களும் எப்போதிலிருந்து நீரப்பாசன காரியாலயங்களாக தரம் உயர்த்தப்படும் என்பதனை இச்சபைக்கு தெளிவாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை விடுத்துள்ளார்.

மூதூர், தோப்பூர், பாலைத் தோப்பூர் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களின் நீர்ப்பாசன நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கு இதுவரையும் திருமலை நகரில் அமைந்துள்ள நீர்ப்பாசன காரியாலயத்திற்கு பல சிரமங்களுக்கு மத்தியில் நீண்ட தூரம் போக்குவரத்து செய்து திருமலை நகருக்கு வருகை தந்தனர். இதேபோன்று, புல்மோட்டை குச்சவெளியில் திரியாய்ப் பிரதேச விவசாயிகள் தங்களின் நீர்ப்பாசன நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கு நீண்ட தூரம் பிரயாணம் செய்து திருமலை நகரில் அநை;துள்ள நீர்ப்பாசன காரியாலயத்திற்கு சென்று வந்தனர்.

பொத்துவில், பாணம, லகுகல பிரதேச விவசாயிகள் தங்களின் நீர்ப்பாசனப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக தம்பிலுவில் நீர்ப்பாசன காரியாலயம் சென்று வந்தனர். கிழக்கு மாகாண விவசாயிகளின் நன்மை கருதி உருவாக்கப்பட்ட இவ் உப நீர்ப்பாசன காரியாலயங்களால் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஏழை விவசாயிகள் நன்மையடைந்து வருகின்றனர்.
இழுத்தடிப்புச் செய்யப்படுவது ஏன்? இழுத்தடிப்புச் செய்யப்படுவது ஏன்? Reviewed by Madawala News on 11/26/2016 02:35:00 PM Rating: 5