பொத்துவில் பிரதேச சபை இதனை கருத்திற் கொள்ளுமா?


(பொத்துவில் தாஜகான் )
பொத்துவில் பொது நூலகத்தின் பரிதாப நிலை வாசகர்கள் கவலை 

பொத்துவில்  பிரதேசத்தின் பொது நூலகமானது பொத்துவில் பிரதேசசபையின் உழவு இயந்திரங்களையும், பழைய வாகனங்களையும், இரும்புக் கழிவுப் பொருட்களையும்தேக்கி வைக்கின்ற ஒரு இடமாக காணப்படுவதனால் பொத்துவில் பொது நூலகத்தின் வாசகர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

இது பற்றி இன்று பொதுநூலகத்தின் வாசகன் சலீம் கருத்து தெரிவிக்கையில் வருகின்ற காலம் அடை மழை நிறைந்த காலமாதலால் நூலகத்திற்கு வருகின்ற வாசகர்களின் வாகனங்களை தரித்து வைப்பதற்கான போதிய இடவசதியில்லை. இது பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவிக்கையில் 

உடனடியாக பொத்துவில் பிரதேச சபையின் வாகனங்களை பிரதேச சபையின் வளவிற்குள் இடம் ஒதுக்கி பாதுகாக்குமாறு பொது நூலகத்தை சுதந்திரமான முறையில் இயங்குவதற்கான நடவடிக்கையினையும் பொத்துவில் பிரதேச சபையின் செயலாளர் முன்னெடுக்க வேண்டும்  அத்துடன் பொதுநூலகத்தின் வளவினுள் பசுமைப்புரட்சியை ஏற்படுத்தும் முகமாக மரங்களையும் வாசகர்கள் வெளியில் இருந்து கொண்டு பத்திரிகை படிப்பதற்கான இருக்கைகளையும் அமைக்க முன்வருமாறு கேட்டுக் கொண்டார் .


பொத்துவில் பிரதேச சபை இதனை கருத்திற் கொள்ளுமா? பொத்துவில் பிரதேச சபை இதனை கருத்திற் கொள்ளுமா? Reviewed by Madawala News on 11/06/2016 03:22:00 PM Rating: 5