அமெரிக்க தேர்தல் தினத்தில் அல்கய்தா தாக்குதல் : அமெரிக்க புலனாய்வு பிரிவு எச்சரிக்கை ..



அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அமெரிக்காவில் நவம்பர் 8–ந் தேதி நடக்கிறது. 

இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்ட்டியிடும் டொனால்டு டிரம்ப் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.

உலக முழுவதும் பரபரப்பாக உற்று நோக்கப்படும் இந்த  தேர்தலுக்கு முந்தைய நாள் அமெரிக்காவில் அல்-கொய்தா  பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என அமெரிக்க புலனாய்வு அமைப்பு எச்சரித்துள்ளது.

தேர்தலுக்கு முந்தைய நாளில அல்-கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்பது குறித்து நியூயார்க டெக்சாஸ வர்ஜினியா உள்ளிட்ட இடங்களில் உள்ள அதிகாரிகளையும பயங்கரவாத  ஒழிப்பு கூட்டுப் படைகளையும் அமெரிக்க புலனாய்வு அமைப்பினர் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


அமெரிக்க தேர்தல் தினத்தில் அல்கய்தா தாக்குதல் : அமெரிக்க புலனாய்வு பிரிவு எச்சரிக்கை .. அமெரிக்க தேர்தல் தினத்தில் அல்கய்தா தாக்குதல் : அமெரிக்க புலனாய்வு பிரிவு எச்சரிக்கை .. Reviewed by Madawala News on 11/05/2016 09:19:00 AM Rating: 5