கலாசார உடைக்கே அனுமதி வழங்கினோம் : தர்கா நகர் கல்வியற் கல்லூரியின் மறுப்பறிக்கை.


தர்கா நகர் கல்வியற் கல்லூரியின் மூன்றாம் வருட ஆசிரிய மாணவிகள் ஆசிரியர் பயிற்சிகளுக்ககாக பாடசாலைகளுக்கு செல்லும் போது கலாசார உடை அணிந்து செல்லவே அனுமதி வழங்கினோம் என தர்கா நகர் கல்வியற் கல்லூரியின் நிர்வாகம் மடவளை நியுஸுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.(குறித்த கடிதம் மேலே இணைக்கப்பட்டுள்ளது)

முன்னதாக கல்லூரியில் பயிலும்  3ம் வருட ஆசிரிய மாணவிகள் பாடசாலைகளுக்கு பயிற்சிக்காக செல்லும் போது கல்லூரி சீருடை ( பச்சை நிற சாரி ) செல்லுமாறு சுற்று நிருபமொன்றை அனுப்பியிருந்தது.


(ப்குறித்த சுற்று நிருபத்தில் பச்சை நிற ஸாரி என குறிப்பிடப்பட்டிருந்த அதேவேளை முஸ்லீம் மாணவிகளுக்கு கலாசார உடைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள விடயம் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை அது தவிர முன்னதாக இங்கு கருப்பு நிற அபாயா அணிந்து கூட முஸ்லீம் மாணவிகள் பயிற்சிக்கு சென்றுள்ளனர்.)

அதேநேரம் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் பேருவளை முன்னாள் நகர சபை எதிர்கட்சி தலைவர் பதியூதீன் அவர்களை நாம் தொடர்பு கொண்டு  இந்த விடயம் தொடர்பில் கேட்டிருந்தபோது...

எமது கலாசாரத்தை பிரதிலிக்கும்  உடையை அணிய அனுமதி வழங்க கல்லூரி பீடதிபதி சம்மதம் தெரிவித்ததாக  எம்மிடம் குறிப்பிட்டார்.

அது தொடர்பாக அவர் கூறிய விடயத்தை அபாயா தடை நீங்கியது என தலைப்பிட்டு நாம் பிரசுரித்திருந்தோம்.

இந்த நிலையில் கல்வியற் கல்லூரி மடவளை நியுஸுக்கு ஒரு மறுப்பறிக்கையை அனுப்பியுள்ளது.

குறித்த மறுப்பறிக்கையில் ..

முஸ்லீம் கலாசார உடைக்கு  அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள கல்லூரி நிர்வாகம் (ஸாரி பர்தா கை நீள் சட்டை ) முஸ்லீம் கலாசார உடையை அணிந்தே மூன்றாம் மாணவிகள் பயிற்சிக்கு செல்வதாக  பேருவளை அரசியல் பிறமுகர்களிடம் சுட்டிக்காட்டிய பின்னர்  அதனை அவர்கள் இஸ்லாமிய கலாசார உடை என ஏற்றுக்கொண்டு சென்றுவிட்டதாகவும் கல்லூரி பீடாதிபதி எமக்கு அனுப்பியுள்ள மறுப்பறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் முன்னாதாக

 "அபாயா தடை , அதனை தொடர்ந்து அபாயா தடை நீக்கம் , என நாம் வெளியிட்ட இரு செய்திகளிலும் விடயத்தை  மடவளை நியுஸ் திரிபுபடுத்தி செய்தி வெளியிட்டுள்ளதாக கல்லூரி நிருவாகம் குற்றம் சுமத்தியுள்ளது.

(முன்னதாக இந்த கல்லூரியில் மூன்றாம் வருட முஸ்லீம் மாணவிகள் கருப்பு நிற அபாயா அணிந்து பயிற்சிக்கு சென்று வந்துள்ளதாகவும் தற்போது சீறுடை என்ற பெயரிலும் கலாசார உடை என்ற பெயரிலும் அபாயா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளாக முஸ்லீம் காங்கிரஸ் முன்னாள் எம் பி அஸ்லம் ஹாஜியார் குற்றம் சுமத்தினார்.அவர் எமக்கு வழங்கிய நாம் சற்று நேரத்தில் பதிவேற்றவுள்ளோம்) 
கலாசார உடைக்கே அனுமதி வழங்கினோம் : தர்கா நகர் கல்வியற் கல்லூரியின் மறுப்பறிக்கை. கலாசார உடைக்கே அனுமதி வழங்கினோம் : தர்கா நகர் கல்வியற் கல்லூரியின் மறுப்பறிக்கை. Reviewed by Madawala News on 11/19/2016 12:34:00 PM Rating: 5