Free Space

துமிந்த சில்வாவுக்கு கடும் சுகயீனமாம் ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்ற பரிந்துரை !


பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் மரண தண்டனை வித்திக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிற்ச்சை பெற்றுவரும் நிலையில் அவரை மேலதிக சிகிற்ச்சைக்காக ஶ்ரீ ஜயவர்தன புர வைத்தியசாலைக்கு மாற்ற சிறைச்சாலை வைத்திய நிபுணர்களால்  பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரத லக்ஸ்மன் கொலை இடம்பெற்ற 
சம்பவத்தில் துமின்தவுக்கு தலையில் பலமான அடி பட்டதால் அவரின் மூலையில் பாதிப்பு ஏற்பட்டிருந்ததாகவும் அப்போது அவர் ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிற்ச்சை பெற்றுள்ளார்.

அவரின் மருத்துவ சிகிற்ச்சை விபரம் அங்கு இருப்பதால் அதே மருத்துவமணைக்கு அவரை மேலதிக சிகிற்சைக்கு அனுப்ப பரிந்துரை செய்யப்பட்டுள்ளபோதும் சிறைச்சாலை பிரதான வைத்திய நிபுணர் இன்று சேவைக்கு சமூகம் தராததால் அவர் இன்றைய தினம்  ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.


துமிந்த சில்வாவுக்கு கடும் சுகயீனமாம் ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்ற பரிந்துரை ! துமிந்த சில்வாவுக்கு கடும் சுகயீனமாம் ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்ற பரிந்துரை ! Reviewed by Madawala News on 11/12/2016 12:21:00 PM Rating: 5