இலங்கை பாகிஸ்தான் உறவில் எதுவித விரிசல்களும் இல்லை !


இலங்கையுடனான பாகிஸ்தான் உறவில் எதுவித விரிசலும் இல்லை என பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மடவளை நியுஸுக்கு குறிப்பிட்டார்.

இந்தியா இலங்கை உறவு வழுப்பெற்றுள்ள நிலையில் இந்தியாவுக்கு ஆதரவாக இலங்கை செயற்படுவாக விமர்சனங்கள் எழும்பியுள்ளமை தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பிய போது அவர் இவ்வாறு பதில் அளித்தார்.

மேலும் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்...

இலங்கை பாகிஸ்தான் இடையே தொடர்ந்து நல்ல உறவு இருந்துவருகிறது. சிறு விடயங்கள் எமது நீண்டகால உறவில் விரிசலை ஏற்படுத்தாது.அப்படியான நிலமைகளை சரிசெய்யவே பாகிஸ்தானை பிரநிதித்துவப்படுத்தி நாம் இங்கு இருக்கிறோம்.

இலங்கை பாகிஸ்தான் நல்லுறவை தொடர்ந்து கொண்டு செல்ல நாம் உறுதிபூண்டுள்ளோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கை பாகிஸ்தான் உறவில் எதுவித விரிசல்களும் இல்லை ! இலங்கை பாகிஸ்தான் உறவில் எதுவித விரிசல்களும்  இல்லை ! Reviewed by Madawala News on 11/06/2016 11:02:00 AM Rating: 5