தனியார் பேருந்து வ‌ண்டி நிறுவ‌ன‌ங்க‌ளின் இலாப‌வெறி !


- கலையரசன் தர்மலிங்கள் -
இல‌ங்கையில் த‌னியார் பேருந்து வ‌ண்டி நிறுவ‌ன‌ங்க‌ளின் இலாப‌வெறி கார‌ண‌மாக‌ வீதி விப‌த்துக்க‌ளும் ம‌ர‌ண‌ங்க‌ளும் ச‌ம்ப‌விப்பதாக பாதுகாப்புக்கான‌ தேசிய‌ மத்திய நிலையத்தின் த‌லைவ‌ர் சிசிற‌ கொட‌கொட‌ தெரிவித்துள்ளார்.

இந்த‌ வருட‌த்தில் க‌ட‌ந்த‌ ப‌த்து மாத‌ங்க‌ளில் ம‌ட்டும், ப‌ஸ் வ‌ண்டி விப‌த்துக‌ளில் 169 பேர் பலியாகியுள்ளார்.அதிக‌ ப‌ய‌ணிக‌ளை ஏற்றுவ‌து என்ற‌ போட்டி கார‌ண‌மாக‌,ப‌ஸ் வ‌ண்டி சார‌திக‌ள் மிக‌வும் வேக‌மாக‌ வண்டியோட்டுவதும் ப‌ஸ் நிறுத்துமிட‌த்தில் ப‌ய‌ணிக‌ள் இற‌ங்குவ‌த‌ற்கும், ஏறுவ‌த‌ற்கும் சார‌திக‌ள் போதுமான‌ நேர‌ம் கொடுக்காததாலும் ய‌ணிக‌ள் விப‌த்துக்குள்ளாகின்ற‌தாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,

மேலும் தெருவில் போகும் பிற‌ வாக‌ன‌ங்க‌ளுட‌ன் மோதுவ‌தாலும், பாத‌சாரிக‌ளுட‌ன் மோதுவ‌தாலும் ப‌ல‌ர் விப‌த்துக்குள்ளாகி பலியாகியுள்ளதாகவும் சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.

ப‌ஸ்ஸில் இருக்கைக‌ளை கூட்டி அதிக‌ ப‌ய‌ணிக‌ளை ஏற்ற‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌, இருக்கைகளுக்கு இடையிலான‌ இடைவெளியும் ஒடுக்க‌மாக‌ உள்ள‌து. இத‌னால் விப‌த்து ந‌ட‌க்கும் பொழுது முழ‌ங்காலில் காய‌ங்க‌ள் உண்டாவதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தனியார் பஸ் சார‌திக‌ள் பலர் த‌ண்டனைகளுக்கு அஞ்சாம‌ல் வாகனத்தை செலுத்துவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள அதேவேளை மிக‌ப் பெரிய‌ தொழில‌திப‌ர்க‌ள், அர‌சிய‌ல்வாதிக‌ள் ம‌ட்டும‌ல்ல‌ சில‌ பொலிஸ் உய‌ர் அதிகாரிக‌ளும் ப‌ஸ் உரிமையாள‌ர்க‌ளாக‌ இருபதே இவர்களின் அச்சமின்மைக்கு காரணம் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


தனியார் பேருந்து வ‌ண்டி நிறுவ‌ன‌ங்க‌ளின் இலாப‌வெறி ! தனியார் பேருந்து வ‌ண்டி நிறுவ‌ன‌ங்க‌ளின் இலாப‌வெறி ! Reviewed by Madawala News on 11/06/2016 03:50:00 PM Rating: 5