ஒரு துண்டுக்காணியைக் கூட முஸ்லிம் மக்களுக்கு வழங்கவில்லை - சுபையிர்MPC



-எம்.ஜே.எம்.சஜீத்-

26 வருடங்கள் காணி நிருவாகத்தினை வகித்தஏறாவூர் பற்று பிரதேச செயலகம் இதுவரை ஒருதுண்டுக்காணியைக் கூட முஸ்லிம் மக்களுக்குவழங்கவில்லை என கிழக்கு மாகாண சபைஉறுப்பினர் எம்.எஸ் சுபையிர் குற்றம்சுமத்தினார்.

ஏறாவூர் பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் பிரதி அமைச்சர் அமீர் அலி மற்றும்பாராளுமன்ற உறுப்பினர் யோகஸ்வரன்ஆகியோரின் இணைத்தலைமையில் நேற்று (8) ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில்நடைபெற்றது.

இதன்போது உரையாற்றுகையிலே கிழக்குமாகாண சபை உறுப்பினர் மேற்கண்டவாறுதெரிவித்தார். 

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் ஏறாவூர்நகர பிரதேச செயலகத்திற்குட்பட்ட மிச்நகர்இ மீராகேணிஇ ஐயங்கேணி ஆகிய மூன்று கிராமசேவகர் பிரிவுகளின் காணிகள் ஏறாவூர் பற்றுபிரதேச செயலகத்தினால் நிருவாகிக்கப்பட்டுவருகிறது. இதனால் அப்பிரதேசத்தில் வாழும்மக்கள் நிருவாக ரீதியாக பலபிரச்சிணைகளுக்கு முகம்கொடுத்துவருகின்றனர். 

குறிப்பாக மேற்படி கிராமங்களில் வாழும் மக்களது இனப்பரம்பலுக்கேற்ப அரச காணிகள் பங்கீடு செய்கின்ற போது ஒரு துண்டுக் காணியேனும் அப்பிரதேச மக்களுக்கு வழங்கப்படவில்லை என்பதனை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

1990ஆம் ஆண்டு இம்மூன்று கிராம சேவகர்பிரிவுகளுக்குமான காணி விடயங்கள் ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்திலயேகையளிக்கப்பட்டது. இருந்தும் அங்கு 2.8 சதுரகிலோ மீற்றர் நிலப்பரப்பில் நான்காயிரம்குடும்பங்களும் சுமார் பதினொராயிரம்தனிநபர்களும் வாழ்ந்து வருகின்றனர். 

இதனால் அப்பிரதேசத்தில் வாழும் மக்கள்சனநெருக்கத்தினால் சுகாதார ரீதியாக பலபிரச்சிணைகளை எதிர்நோக்கி வருவதுடன்சுத்தமான குடிநீர் பிரச்சிணைகளையும்எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக மேற்குறித்த பிரதேசங்களில் வாழுகின்ற மக்களின் கல்வ சுகாதார மற்றும்விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு காணிப்பிரச்சினையே பெரும்பிரச்சினையாகவுள்ளது.

நான் அண்மையில் பிரதேச செயலாளரிடம் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தினூடாக ஒருவிளையாட்டு மைதானத்தை அப்பிரதேசத்தில் அமைப்பதற்கு கதைத்த போது அவர் என்னிடம்  சம்மதம் தெரிவித்தார். 

அந்த அடிப்படையிலே அப்பிரதேச மக்களின்நலன் கருதி கல்விஇ சுகாதார மற்றும்விளையாட்டு போன்ற அபிவிருத்திகளுக்குஅங்குள்ள அரச காணிகளைபெற்றுக்கொடுப்பதற்கு இப்பிரதேசஅபிவிருத்திக்குழு முயற்சிக்க வேண்டும். 


தற்போது அப்பிரதேசத்திலுள்ள சுமார் நானூறு ஐந்நூறு ஏக்கர் காணிகளை ஒரு அரசியல்கட்சியைச் சார்ந்த நபருக்கு நீண்டகாலகுத்தகைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 

ஆனால் அந்தக்காணிகளில் எந்தவிதமான பயிர்ச்செய்கையோ திட்டங்களோ மேற்கொள்ளப்படவில்லை குறிப்பாக மக்கள் செறிந்து வாழும் இப்பிரதேசத்தில் மக்களுக்கு தேவையான காணிகளை வழங்க முடியாதசந்தர்ப்பத்தில் அங்கு பெருமளவிலான காணிகள் நீண்ட நாள் குத்தகைக்கு வழங்கப்பட்டிருப்பது மிகவும் கவலையானவிடயமாகும்.


மிச்நகர்  மீராகேணி ஐயங்கேணி ஆகிய மூன்றுகிராம சேவகர் பிரிவுகளில் வாழும் மக்கள்தங்களது அரசம மற்றும் பொதுத்தேவைகளுக்காக காணிகளைப்பெற்றுக் கொள்வதில் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள்.  எனவே இதுவிடயமாகக்கவனத்திற்கொண்டு எதிர்காலத்தில் அம்மக்களுடைய தேவைகளை நிவர்த்திசெய்யக்கூடிய வகையில் அரச காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமெனவும் அவர்மேலும் குறிப்பிட்டார்.

ஒரு துண்டுக்காணியைக் கூட முஸ்லிம் மக்களுக்கு வழங்கவில்லை - சுபையிர்MPC ஒரு துண்டுக்காணியைக் கூட முஸ்லிம் மக்களுக்கு வழங்கவில்லை - சுபையிர்MPC Reviewed by Madawala News on 11/09/2016 04:12:00 PM Rating: 5