Accaddemy

ஒரு வார கால அவகாசம் மறைக்கப்பட்டதேன்?


இறக்காமம் மாணிக்கமடு புத்தர் சிலை தொடர்பில் மு.கா ஆதரவாளர்களினால் மு.காவின் உயர் புள்ளிகள் சிலரின் உதவியுடன் இயக்கப்படும் இணையதளங்களில் ,இச் சிலையை அகற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் ஹக்கீமிடம் ஒருவார கால அவகாசம் கேட்டுள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தனர்.

இது தொடர்பில் அமைச்சர் ஹக்கீமின் ஊடகப் பிரிவு ஏனைய இணையதளங்களுக்கு அனுப்பி வைத்திருந்த செய்தியில் அந்த ஒரு வார காலம் என்ற விடயம் மறைக்கப்பட்டிருந்தது.நான் நினைக்கின்றேன் ஒருவார கால அவகாசம் என்ற செய்தி அமைச்சர் ஹக்கீமிற்கு ஆப்பாக வந்து முடியும் என்பதால் மு.காவினர் கால வரையறையை வெளியிடுவதை தடுத்திருக்கலாம்.இவ்விடயம் இச் சிலை அகற்றல் மு.காவினால் அவ்வளவு தூரம் சாத்தியமானதல்ல என்பதை முன் கூட்டியே அறிந்து கொள்ளச் செய்கிறது.

எது எவ்வாறு இருப்பினும் இதனை இவர்கள் ஒருவார காலத்தினுள் சாதிப்பது இயலாத காரியம்.சாதித்தால் அது மு.காவின் வரலாற்றுச் சாதனை என்பதை மறுப்பதற்கில்லை.அமைச்சர் ஹக்கீம் ஒரு வார காலத்தினுள் சாதிக்க வேண்டாம்.அவருக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்குவோம்.அதற்குள்ளாவது அமைச்சர் ஹக்கீம் சாதிக்காது போனால் என்ன செய்வார் என பகிரங்கமாக கூற வேண்டும்.இதற்கு அவர் கால வரையறையுடனான சவாலுடன் நிச்சயம் எதனையும் ஒரு போதும் கூற மாட்டார்.அந்தளவு துணிவு அவரிடமில்லை.இப்படித் தான் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக விடயத்திலும் இன்று வரும் நாளை வரும் எனக் கூறியிருந்தார்கள்.இனியும் அவரது இவ்வாறான பேச்சுக்களை நம்பி வேடிக்கை பார்க்க முடியாது.

இதனை முன் நின்று முழுமையான அம்பாறை மாவட்டத்தின் அரசியல் அதிகாரப்பலத்தை தன் வசம் வைத்துள்ள மு.கா சாதித்துக் காட்ட வேண்டும்.இதனை விட உச்ச அதிகாரப்பலம் மு.காவிற்கு இதற்குப் பிறகு ஒரு போதும் கிடைக்காது எனக் கூறினாலும் தவறில்லை.இப்படியான அதிகாரப்பலமுள்ள நிலையில் இதனை மு.கா சாதிக்காது போனால் இதன் பிறகு மு.கா எதனையும் சாதிக்க முடியாதென்ற விடயம் துல்லியமாகும்.எதனையும் சாதிக்க இயலாத மு.காவிற்கு ஏன் முஸ்லிம் மக்கள் வாக்களிக்க வேண்டும்? இதனை சாதிக்க முடியாதென்றால் அமைச்சர் ஹக்கீம் விடுதலைப் போராட்ட இயக்கமான மு.காவின் தலைமைப் பதவியில் இருந்து விலகுவதே இலங்கை முஸ்லிம்களுக்கு செய்கின்ற பேருதவியாகும்.


ஒரு வார கால அவகாசம் மறைக்கப்பட்டதேன்? ஒரு வார கால அவகாசம் மறைக்கப்பட்டதேன்? Reviewed by Madawala News on 11/11/2016 10:18:00 PM Rating: 5