Free Space

உங்கள் நாடகத்தை அறிந்திடாத முஸ்லிம்கள், உங்களின் நடிப்புக்கு பழியானதுதான் கவலை!




நல்லாட்சியை கொண்டுவர முயற்ச்சித்தவர்கள் எல்லாம், இன்று முஸ்லிம்களுக்கு நடக்கும் அநியாயத்தை கண்டு மூச்சுத்திணரி மரணஓலம் எழுப்புவதை பார்த்து,  முஸ்லிம் மக்கள் மூக்கின் மேல் விரல் வைத்து யோசிக்கவேண்டிய கட்டத்துக்கு ஆளாகிவிட்டார்கள்.

மஹிந்த ஆட்சியில் நடந்த இனவாத செயல்களுக்கு மஹிந்த துணைபோகின்றார் என்ற காரணத்துக்காகவே,
நல்லாட்சியை கொண்டுவருவதற்கு முயற்சித்தவர்களில் முதன்மையானவர் அஸாத்சாலி என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

ஜனாதிபதி தேர்தலில் ஹக்கீமோ அல்லது ரிசாத் பதியுதீனோ களத்தில் இறங்குவதற்கு முதலில், முஸ்லிம் பகுதிகளில் குறிப்பாக, கிழக்குமாகாணத்தில் களம் இறங்கியவர்களில் முதன்மையானவர் இந்த அஸாத்சாலி என்பதை எல்லோரும் அறிவார்கள்.

அந்த நேரத்தில் அஸாத்சாலி, மைதிரியுடைய தம்பி டட்லி, தயாகமகே, கிருணிக்கா, முஜிபுர் ரஃமான் போன்றோரை கிழக்குவாழ் முஸ்லிம்கள் தலைமேல் வைத்து தூக்கிக்கொண்டு வலம் வந்த நேரத்தில்தான், தாங்களும்  கட்சிமாறாது விட்டால்,காணாமல் போய்விடுவோம் என்ற பயத்தின் காரணமாகவே,  நல்லாட்சிக்கு நானும் ரெடி என்று ரிசாத் பதியுதீன் அவர்களும் களத்தில் குதித்தார்.

அதன் பிற்பாடு ஹக்கீம் அவர்கள் மஹிந்தவை பிரியமுடியாமல் (லவ் லெட்டர்)ஒன்றை மஹிந்தவுக்கு எழுதிவிட்டு துண்டைக்காணோம், துணியைக்காணோம் என்று ஓடிவந்து கடைசி நேரத்தில் நல்லாட்சியில் சேர்ந்து கொண்டார்.

அதே நேரம் தனது தளபதியான பசீர் சேகுதாவுதை மஹிந்த சார்பாக நிறுத்திவிட்டுத்தான் வந்தார். காரணம் தப்பித் தவறியேனும் மஹிந்த ஆட்சிக்கு வந்தால் பசீரை பயன்படுத்தி திரும்பவும் சேர்ந்து கொள்ளலாம் என்ற திட்டம்தான்.

ஆனால் அந்த திட்டத்துக்கு பழியானவர் பசீர் சேகுதாவூத்துத்தான் என்பது இப்போது நமக்கு புரிந்துவிட்டது....

அந்த திட்டம் பழித்து ஒருவேளை மஹிந்த ஆட்சியமைத்திருந்தால் ரிசாத் பதியுதீன் கதி அதோகதிதான்.

உள்ளூர மஹிந்த தேற்றது ஹக்கிம் அவர்களுக்கு கவலைதான்!...

எது எப்படி இருந்தாலும் உங்களுடைய அத்தனை பேருடைய நோக்கம் எல்லாம், மஹிந்தவை வைத்து முஸ்லிம்களை "பேக்காட்டியதுதான்" என்பது, இப்போது நீங்கள் பேசும் பேச்சை வைத்தே அறியக்கூடியதாக உள்ளது.

இப்படியான உங்களின் நாடகத்தை அறிந்திடாத முஸ்லிம்கள், உங்களுடைய நடிப்புக்கு பழியானதுதான் மிச்சம்....

எந்த நோக்கத்துக்காக மஹிந்தவை மாற்றினீர்களோ அந்த நோக்கம் இந்த நல்லாட்சியில் நிறைவேறவில்லை, அதுமட்டுமல்ல அதை விட கூடுதலான இனக்குறோத செயல்பாடுகளுடன், வெளிநாட்டு அழுத்தங்களுக்கு பயந்து  முஸ்லிம்களுக்கு எதிராக இந்த அரசாங்கம் செயல்படும் விதம், சென்ற அரசாங்கத்தை விட இந்த நல்லரசாங்கம் மோசமாக செயல்படுகின்றது என்பதை தெளிவுபடுத்திவிட்டது.

இந்த நேரத்தில் அஸாத்சாலி, முஜிபுர்ரஃமான்  போன்றவர்கள் நல்லரசாங்கத்தின் பிரதமரையோ அல்லது ஜனாதிபதியையோ நேரடியாக குற்றம் சாட்டாமல்  மற்றவர்களை குற்றம் சாட்டிக்கொண்டு தப்பித்துக்கொள்ள முயற்ச்சிப்பதை கண்டு சிரிப்பாக உள்ளது.

முஸ்லிம்கள் சார்பாக கட்சி நடத்தும் கட்சித்தலைவர்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன.


எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பதவிகளை தூக்கி எறிந்துவிட்டு அவர்களினால் வரமுடியாது.
அப்படி அவர்கள் வெளியே வந்தால் அவர்களும், அவர்களுடை கட்சிகளும் இருந்த தடம் தெரியாமல் போய்விடும் என்ற காரணத்தினால், அவர்கள் முஸ்லிம் சமூகம் மூழ்கி போனாலும் பரவாயில்லை நாம் தப்பிவிட வேண்டும் என்ற நிலையில் அவர்கள் உள்ளார்கள்.

இதனை அறிந்து கொண்ட பெரும்பான்மை சமூகத்தலைவர்கள், இவர்களுக்கு எழும்புத்துண்டை போட்டால் தலைகுனிந்து விடுவார்கள் என்ற தாரக மந்திரத்தை பயன்படுத்தி லாபம் அடைகின்றார்கள்.

இந்த நேரத்தில் அஸாத்சாலி அவர்கள் அரசாங்கத்தின் பதவிகளில் இல்லாது விட்டாலும், ஒரு அமைச்சருக்குறிய அத்தனை அனுகூலங்களையும் பெற்று வசதியாக வாழ்வதற்கு இந்த நல்லரசாங்கம் உதவி செய்துள்ளது...

இன்று யார் ஜனாதிபதியை நேரடியாக தொடர்வு கொள்ள முடியாது விட்டாலும், அசாத் சாலி  உடனே தொடர்பை ஏற்படுத்த கூடிய நிலையில் உள்ளார் என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.

அப்படிப்பட்ட அஸாத்சாலி அவர்கள் இந்த அரசாங்கத்தின் ஜனாதிபதியையோ, பிரதமைரையோ தட்டிக்கேட்காமல், ஏதோ காரணத்தினால் அடிமைப்பட்டு கிடக்கும் முஸ்லிம் தலைமைகளை குற்றம் சாட்டிவிட்டு தான் தப்பித்துக்கொள்ள முயற்சிப்பது எந்த வகையில் நியாயம் என்று எண்ணத்தோன்றுகிறது.

இந்த நல்லாட்சியில் நடக்கும் இனரீதியான அநியாயங்களுக்கு ஜனாதிபதி என்ன கூறுகின்றார் என்பதை நீங்கள் கேட்டறிந்து, அந்த பதிலை மக்கள் மத்தியில் முன்வைக்க உங்களால் முடியாமல் போவதன் மர்மம் என்ன?

மஹிந்த ஆட்சியில் சகல விடயங்களுக்கும் மஹிந்தவை குற்றம்சாட்டிய நீங்கள் இப்போது நடக்கும் அநியாயங்களுக்கு, இப்போதுள்ள ஜானாதிபதியை குற்றம் சாட்ட தயங்குவது ஏன்?

அப்படியென்றால், நாங்கள் முஸ்லிம் சமூகத்துக்காக மஹிந்தவை மாற்றவில்லை, தங்களுடைய சுயநலத்துக்குத்தான் ஆட்சியை மாற்றினோம் என்று கூறவருகின்றீர்களா?
என்கின்ற பல கேள்விகளுக்கு உங்களால் பதில் கூற முடியுமா? என்று கேட்கத்தோன்றுகிறது.

அப்படியானால் நீங்கள் எல்லோரும் அரசியல் வியாபாரிகள் தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

உங்களை நம்பி முஸ்லிம் சமூகம் ஏமாந்த விடயத்துக்கு, மறுமையில் நிச்சயமாக அல்லாஹுவிடம் பதில் கூறியே ஆகவேண்டும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பதை நீங்கள் மட்டுமல்ல, மற்ற அரசியல் வியாபாரிகளும் புரிந்து கொள்ள வெகுநாட்கள் ஆகாது என்பதை,  நாங்கள் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்......

எம்.எச்.எம்.இப்ராஹிம்
கல்முனை......

உங்கள் நாடகத்தை அறிந்திடாத முஸ்லிம்கள், உங்களின் நடிப்புக்கு பழியானதுதான் கவலை! உங்கள்  நாடகத்தை அறிந்திடாத முஸ்லிம்கள், உங்களின் நடிப்புக்கு பழியானதுதான் கவலை! Reviewed by Madawala News on 11/11/2016 10:37:00 PM Rating: 5