Kidny

Kidny

இதனை முஸ்லிம் சமூக புத்திஜீவிகள் புரிந்து கொள்வார்களா?


இன்று இலங்கையில் பயங்கரவாத இயக்கங்களின் செயல்பாடு முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் நிலையில், சிங்கள கடும்போக்காளர்கள் களத்தில் இறங்கி சிறுபாண்மை இனத்துக்கு எதிராக, குறிப்பாக முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக பல தேவையில்லாத குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, அவர்கள் இனவாதமாக செயல்படுவதை நாம் காண்கின்றோம்.

இந்த நாட்டின் ஒற்றுமைக்காகவும், நாடு பிரிந்துவிடக்கூடாது என்ற விடயத்துக்காகவும், பல சொல்லொன்னா துயரங்களை கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகம் சந்தித்த விடயத்தை இந்த இனவாதிகள் அறிந்திருந்தும், ஏன் அவர்கள் எங்களை குறிவைக்கின்றார்கள் என்பது ஆச்சரியமாகவே உள்ளது.

முந்திய காலங்களில், ஜீ.ஜீ.பொன்னம்பலம் போன்ற தமிழ் அரசியல் தலைவர்கள், அவர்களுடைய  50:50 என்ற கோரிக்கைக்கு,  அன்றய முஸ்லிம் தலைவர்களான ரீ.பி.ஜாயா, ராசீக் பரீட் போன்றவர்களிடம் உதவி கோரியபோது, அதற்கு அவர்கள் ஆதரவளிக்க முன்வர வில்லை. காரணம், இலங்கையின் ஆட்சித் தலைவர்களாக இருக்கப்போகின்றவர்கள் சிங்கள தலைவர்கள்தான்.அவர்களை எதிர்த்துக்கொண்டு சிறுபாண்மை முஸ்லிம்களாகிய  நாங்கள் வாழமுடியாது.


அவர்களுடன் சேர்ந்து இனங்கிய அரசியல் செய்துதான்  எங்கள் பிரச்சினையை தீர்த்துக்கொள்வோமே தவிர,
உங்களுடன் சேர்ந்து கொண்டு போராட நாங்கள் தயார் இல்லை என்று காட்டமாக அன்று பதில் சொன்னார்கள்.

அன்றிலிருந்து இருபெரும் சிங்கள கட்சிகளோடும் இணைந்து பல உறிமைகளை பெற்றிருக்கின்றார்கள்., அதே நேரம் சில பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்தும் வந்தார்கள்.

அப்போதுதான் தமிழர்களுடைய  ஜனநாயக ரீதியான போராட்டத்தை சிங்கள அரசுகள் இரும்புகரம் கொண்டு அடக்க முற்பட்டது. அதன் காரணமாக பல இன்னல்களை அந்த சமூகம் சந்தித்த வேளையில்தான், அது ஆயுதபோராட்டமாக பரிணமித்தது.

இந்த ஆயுத போராட்டத்துக்கு முஸ்லிம்களும் ஆதரவு அளித்திருந்தால், இன்று இந்த நாடு பிளவுபட அது காரணமாக அமைந்திருக்கும்.ஆனால், தமிழர்களுடைய ஆயுத போராட்டத்துக்கு முஸ்லிம்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காகப்  பல இன்னல்களையும், உயிர்ச்சேதங்களையும் அடைந்தோம் என்பது இந்த இனவாதிகளுக்கும்,சிங்கள சமூகத்துக்கும் தெறியாத ஒன்றல்ல.

அதே நேரம் வட கிழக்கிலே நிலை கொண்டிருந்த சிங்கள ராணுவம் முஸ்லிம் மக்களுக்கு இயன்ற அளவு பாதுகாப்பளித்து, உதவி செய்தது என்பதை முஸ்லிம் சமூகம் என்றும் மறப்பதற்கு இல்லை.

சுனாமி நடந்த காலத்தில் இலங்கை ராணுவம், தமிழ்  முஸ்லிம் என்று பாராமல் நிறைய உதவிகள் செய்ததையும் நாம் மறக்கவில்லை.

சுனாமியினால் கிழக்கு மக்கள் பாதிக்கப்பட்ட போதும் பக்கத்திலே இருந்த சிங்கள கிராம மக்கள்  பரிபூரணஉதவிகளை வழங்கி, எங்களுக்கு ஆதரவு கரம் நீட்டினார்கள் என்பதை யாரும் இந்த இடத்தில் மறுப்பதற்கு துணியமாட்டார்கள்.

பயங்கரவாத பிரச்சினை அடக்கப்பட்டதன் பின் இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்கா போன்ற நாடுகளினால் பல பிரச்சினைகள் வந்தபோதும்,
இலங்கை முஸ்லிம்கள் அரசாங்கத்தின் பின்னால்தான் நின்றார்கள்.அதே போன்று முஸ்லிம் நாடுகளும் அமெரிக்காவை எதிர்த்து இலங்கையின் பக்கம்தான் நின்றார்கள்.

இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முஸ்லிம் நாடுகள்தான் பெரும் உதவிகள் செய்தார்கள் என்பது இந்த இனவாதிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் நன்றாகவே தெறியும்.
இந்த யுத்தம் முடிவுக்கு வராதுவிட்டால் நாடு பிளவு படுவதை யாராலும் தடுக்கமுடியாமல் போயிருக்கும் என்பது எல்லோரும் அறிந்த உண்மையாகும்.

அதே நேரம் முஸ்லிம்கள் இதற்கு ஆதரவு அளித்திருந்தால் நாடு எப்பவோ பிளவு பட்டிருக்கும் என்பதும் இந்த இனவாதிகளுக்கு தெறியாத ஒன்றல்ல. 
இருந்தாலும் ஏன் இந்த சிங்கள இனவாதிகள் முஸ்லிம்களை பாராட்டுவதற்கு பதிலாக, எம்மை தூற்றுகின்றார்கள் என்பது புரியாத புதிராக இருக்கின்றது.

எல்லா சிங்கள மக்களும் இந்த இனவாதத்திற்கு உடைந்தையானவர்கள் அல்ல என்பதும் உண்மைதான்.

இவர்களுடைய இனவாதத்துக்கு பின்னால் ஒரு பெரிய சக்தியொன்று இயங்குகின்றது என்பதை நமது முஸ்லிம் சமூகமும் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கின்றார்கள்.

அமெரிக்கா போன்ற சதிகாரர்களின் கைதான் இதற்கு பின்னால் இருக்கின்றது என்பதை சிங்கள சமூகமும் புரிந்து கொண்டதா என்பது கேள்விக்குறிதான்.

இந்த ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்ததன் பின் அமெரிக்காவின் சுயரூபம் வெளியாகி வருகின்றது. அதன் மூலம் தெறிவது என்னவென்றால், தமிழ் ஆயுத குழுக்களை அமெரிக்க ஏஜண்டுகள்தான் வழி நடத்திவந்திருக்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது.

அதன் காரணமாகத்தான் அவர்களுடைய அடுத்த கட்ட ஏஜண்டுகளாக இந்த சிங்கள இனவாதிகளை பாவிக்கினறார்கள் என்பது புத்திசாலிகள் புரிந்து கொள்வார்கள்.

லிபியா, ஈராக்,சிரியா, ஆப்கானிஸ்தான், எகிப்து போன்ற இன்னும் பல நாடுகளில், தான் நேரடியாக யுத்தம் செய்து தனது காரியத்தை சாதிப்பதை விட,
உள்ளூர் ஏஜண்டுகளை வைத்தே, நாட்டைக் குழப்பி அவர்களுடைய என்னங்களை நிறைவேற்றி வருகின்ற விடயம் எந்தனை பேருக்கு தெறியுமோ தெறியாது.

இந்த விடயங்களுக்கு முடிவு கட்டுவது என்றால், சிங்கள அரசுக்கு மட்டுமே முடியும் என்பதுதான் உண்மையாகும்.

அந்த சிங்கள அரசாங்கத்தை தூண்டுவதற்கு நமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முடியும்.
ஆனால் அவர்கள் அதனை செய்ய துணியமாட்டார்கள்.ஏனென்றால் அவர்கள் ஆப்பிழுத்த குரங்கின் கதையாக மாட்டிக்கொண்டார்கள் என்பதே உண்மையாகும்.

நமது அரசியல் வாதிகள் சமூகத்தின் பிரச்சினையை தீர்ப்பதை விட அவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கே அரசியலை பயன்படுத்துகின்றார்கள். என்பதை  நமது சமூகம் புரிந்து கொள்ளாதவரை நமக்கு விடிவு கிடைக்கப் போவதில்லை.

ஆகவே, பல பக்கங்களிலும் முஸ்லிம் சமூகம் பாதிக்கப்பட்டு அநாதையாக நிற்பதைக்கண்டு வேதனையாக உள்ளது.
இதற்கு ஒரே வழி நமது அரசியல் வாதிகளுக்கு முஸ்லிம் மக்கள் தரமான பாடத்தை கற்பிக்கவேண்டும்.

இவர்களுக்கு நாம் கொடுக்கும் தண்டனையை கண்டு எதிர்காலத்தில் (தண்டைனை என்பது ஜனநாயக ரீதியான தண்டனை என்பதை புரிந்து கொள்ளவும்) எமக்கு தலைமை தாங்கவரும் முஸ்லிம் தலைவர்களுக்கு அது ஒரு பாடமாக அமையவேண்டும்.

தமிழ் சமூகத் தலைவர்கள் எந்தவிதமான அரசாங்க பதவிகளையும் பெறாமல், அரசாங்கத்திடம் சோரம் போகாமல், தங்களுடைய பிரச்சினையை வெளியுலகு வரையும் கொண்டு சென்றுள்ளார்கள்.

நமது பிரச்சனைகளை வெளியுலகுக்கு கொண்டு செல்வதற்கான எவ்வளவோ சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதெல்லாம்,
நமது சமூகத் தலைவர்கள் அதனை பயன்படுத்தவில்லை என்பது, இந்த உலகமே அறியும்.

அவர்கள் அதனை பயன் படுத்தியிருந்தால் இன்று இந்த நிலைமை வந்திருக்காது என்பதே உண்மையாகும்.
அவர்கள் அப்படி போராடியிருந்தால் முஸ்லிம் சமூகத்துக்கு வெற்றி கிடைத்திருக்கும்.அதே நேரம் அவர்களின் சுகபோகம் பறிபோயிருக்கும்,
என்பதே உண்மையாகும்.
அவர்களுடைய சுகபோக வாழ்க்கைக்காக முஸ்லிம் சமூகம் பழியாக்கப்படுவதை எத்தனை தூரம் பொருத்துக்கொள்வது,
என்பதே கேள்வியாகும்.

இதனை முஸ்லிம் சமூக புத்திஜீவிகள் புரிந்து கொள்வார்களா?

அல்லது எமக்கு ஏன் வீண்வம்பு என்று ஒதிங்கி கொள்வார்களா?


என்பதை காலம்தான் பதில் சொல்லவேண்டும்....இதனை முஸ்லிம் சமூக புத்திஜீவிகள் புரிந்து கொள்வார்களா? இதனை முஸ்லிம் சமூக புத்திஜீவிகள் புரிந்து கொள்வார்களா? Reviewed by Madawala News on 11/21/2016 01:15:00 PM Rating: 5