Accaddemy

நீதி அமைச்சரின் கருத்துக்கு பொதுபல சேனா மகிழ்ச்சி ...

நாங்கள் நான்கு வருடங்களாக கூறி வந்த விடயம் தற்போதே அரசின் கண்களுக்கு விளங்கியுள்ளதாக பொது பல சேனா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

நீதி அமைச்சர் விஜதாச ராஜபக்‌ஷ் நேற்று ஆற்றிய உரை தொடர்பில்  அவ்வமைப்பில் பிரதம நிறைவேற்று டிலந்த ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

தொடந்து கருத்து வெளியிட்ட அவர்...

இந்த நாட்டில் முஸ்லிம் இனவாத குழுக்கள் இயங்குவதாக நாம் நான்கு வருடங்களாக கூறி வருகிறோம். கடந்த அரசும் இந்த அரசும் அதற்கு செவி சாய்க்கவில்லை. தற்போது அரசுக்கு இது தெளிவு கிடைத்துள்ளது .அதனை இட்டு நாம் மகிழ்ச்சி அடைகிறோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
நீதி அமைச்சரின் கருத்துக்கு பொதுபல சேனா மகிழ்ச்சி ...  நீதி அமைச்சரின் கருத்துக்கு பொதுபல சேனா மகிழ்ச்சி ... Reviewed by Madawala News on 11/20/2016 12:13:00 AM Rating: 5