Accaddemy

டன் பிரியசாத் புறக்கோட்டை பொலிஸில் வாக்குமூலம் ! கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை ...


இனக்குரோத கருத்துக்களை தெரிவித்து வந்த டன் பிரியசாத் என அழைக்கப்படும் தெமட்டகொட சுரேஷ் பிரியசாதை கொழும்பு புறக்கோட்டை பொலிஸார் கைது செய்து வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துவருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் அமீர் அலி முஜீபுர் ரஹ்மான் எம் பி உள்ளிட்ட முஸ்லீம் அரசியல் பிரமுகர்கள்  இன்று பொலிஸ் மாஅதிபர் இடத்தில் நேரடியாக முறையிட்டதை தொடர்ந்து இவருக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அவர் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் அவர் சற்றுமுன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என பொலிஸ் தரப்பு தெரிவிக்கிறது. அவரின் இனவாத கருத்துக்கள் தொடர்பான வீடியோக்களும் பொலீசாரால் சேகரிக்கப்படுவதாக மேலும் தெரிய வருகிறது.

டன் பிரியசாத் புறக்கோட்டை பொலிஸில் வாக்குமூலம் ! கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை ... டன் பிரியசாத் புறக்கோட்டை பொலிஸில் வாக்குமூலம் ! கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை ... Reviewed by Madawala News on 11/15/2016 03:49:00 PM Rating: 5