Accaddemy

எமது பயணத்தை நிறுத்த முடியாது...


அரசாங்கம் ஒரு பொலிஸ் பிரிவை அல்ல நூறு அல்லது ஆயிரம் பொலிஸ் பிரிவுகளை ஆரம்பித்தாலும் எமது பயணத்தை நிறுத்த முடியாது என பொதுபல சேனா அமைப்பின் பொது செயளாலர் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.


இன்று கிருலப்பனையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்..

இலங்கையில் இருந்து செயற்படும் கடும்போக்கு இஸ்லாமிய அமைப்புகள் தொடர்பில் நீதி அமைச்சர் வெளியிட்ட கருத்துக்களை நாம் வரவேற்கிறோம்.

இஸ்லாமிய அடிப்படை வாத சக்திகள் தொடர்பில் நாம் பல வருடங்களாக கூறி வருகிறோம்.அரசுக்கு அது தொடர்பான தெளிவு இன்னும் போதாது ணாம் அவை தொடர்பில் தெளிவுபடுத்த தயாராக உள்ளோம். 

அதற்கான வாய்ப்பை எமக்கு ஏற்படுத்தி தரவேண்டும்.நீதி அமைச்சர் தரப்பு எமக்கு ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்து தரும் பட்சத்தில் அவர்களுக்கு இது தொடர்பாக மேலும் பல தெளிவூட்டல்களை எங்களால் வழங்க முடியும்.

தாற்போது அரசாங்கமும் கூட்டு எதிர்கட்சியினரும் எம்மை விமர்சிக்க துவங்கியுள்ளனர்.எம்மை ஒடுக்க பொலிஸ் பிரிவுகளை ஆரம்பித்துள்ளனர். நூறு அல்ல ஆயிரம் பொலிஸ் பிரிவுகளை ஆரம்பித்தாலும் எமது பயணத்தை தடுக்க முடியாது.

நதியாக ஓடிக்கொண்டுள்ள எம்மை சுனாமியாக மாற்றிவிட வேண்டாம் என ணாம் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் எமக்கு எதுவித அரசியல் நோக்கங்களும் இந்த விடயத்தில் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.
எமது பயணத்தை நிறுத்த முடியாது... எமது பயணத்தை நிறுத்த முடியாது... Reviewed by Madawala News on 11/22/2016 03:41:00 PM Rating: 5