நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியடையக்கூடிய வரவு – செலவு திட்டத்தை எதிர்பாருங்கள். சந்திரிக்கா அறிவிப்பு.



அபி­வி­ருத்­தியை நோக்­க­மாக கொண்ட வரவு – செலவு திட்­ட­மொன்றை நாட்டு மக்கள் எதிர்­வரும் 10 ஆம் திகதி எதிர்­பார்க்க முடி­யு­மென முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க தெரி­வித்தார்.

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவை கொழும்பில் நேற்று சந்­தித்து உரை­யா­டிய பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இந்தச் சந்­திப்பின் போது தேசிய அர­சாங்­கத்தின் இரண்­டா­வது வரவு செலவு திட்டம், அதன் முக்­கிய அம்­சங்கள் மற்றும் நாட்டை எவ்­வாறு அபி­வி­ருத்திப் பாதையில் இட்­டுச்­செல்­வது போன்ற விட­யங்கள் தொடர்­பாக பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டுள்­ளது.

அதன் பின்னர் ஊட­கங்­க­ளுக்­கு­முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க, கருத்து வெளியிடு­கையில்;

நாட்டு மக்­களின் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்யும் வகை­யி­லான புதிய வரவு – செலவு திட்­ட­மொன்றை கொண்டு வரு­வது தொடர்பில் நிதி அமைச்­ச­ருடன் இன்று (நேற்று) பேச்­சு­வார்த்தை இடம்­பெற்­றது. இம்­முறை சிறந்­த­தொரு வரவு – செலவு திட்­டத்தை எதிர்­பார்க்க முடியும் என நம்­பு­கின்றோம்.

அந்த வரவு – செலவு திட்­ட­மா­னது சக­லரும் மகிழ்ச்­சி­ய­டையக் கூடிய விதத்தில் அமைந்­தி­ருக்கும். குறிப்­பாக உள்­நாட்டில் சிறந்­த­தொரு அபி­வி­ருத்­தியை முன்­னெ­டுக்க வழி­வ­குக்கும் வரவு – செலவு திட்­ட­மாக அமைய வேண்டும். இது தொடர்­பி­லேயே நிதி அமைச்­ச­ரு­டனும் பேச்­சு­வார்த்தை இடம்­பெற்­றது. அதனால் எதிர்­வரும் 10 ஆம்தி கதி சிறந்­த­தொரு வரவு–செலவு திட்­டத்தை மக்கள் எதிர்­பார்க்க முடியும் என்றார்.

ரவி­ க­ரு­ணா­நா­யக்க பேச்­சு­வார்த்­தையின் நிறைவில் நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க ஊட­கங்­க­ளுக்கு தெரி­விக்­கையில்,

முத­லீ­டு­களை அதி­க­ரிப்­பது மற்றும் நாட்டை அபி­வி­ருத்திப் பாதையில் கொண்டு செல்­வ­தற்­கான வரவு – செலவு திட்­ட­மொன்றை முன்­வைப்­ப­தற்கு எதிர்­பார்க்­கின் றோம். இது தொடர்­பாக முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­க­வுடன் நான் பேச்­சு­வார்த்தை நடத்­தினேன். தொடர்ச்­சி­யாக அனைத்து தரப்பினருடனும் இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

அதற்கமையவே தற்போது முன்னாள் ஜனா திபதி சந்திரிகா குமாரதுங்கவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தோம் என்றார்.
நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியடையக்கூடிய வரவு – செலவு திட்டத்தை எதிர்பாருங்கள். சந்திரிக்கா அறிவிப்பு. நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியடையக்கூடிய வரவு – செலவு திட்டத்தை எதிர்பாருங்கள். சந்திரிக்கா அறிவிப்பு. Reviewed by Madawala News on 11/07/2016 11:30:00 AM Rating: 5