Accaddemy

இதனை விடவும் அநீதி இல்லை... பட்ஜெட் பற்றிய மஹிந்த ராஜபக்ஷ எம்.பி.யின் கருத்து இதுதான்.



அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்த நிதி அமைச்சர் கூட்டு எதிர்க் கட்சிக்கு மறைமுகமாக உதவி வழங்கிக் கொண்டிருப்பதாக மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் 2017 ஆம் ஆண்டுக்கு முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

நிதி அமைச்சர் எங்கு செல்கின்றார் என அவரே அறியாது போய்க் கொண்டிருக்கின்றார் எனவும், நிதி அமைச்சர் அரசாங்கத்துக்கு கயிறு கொடுத்து விட்டு, கூட்டு எதிர்க் கட்சிக்கு உதவி வழங்கிக் கொண்டிருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. கூறியுள்ளார்.


வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதாகவும், ஏதாவது ஒரு காரணத்தினால் அதனை தோற்கடிக்க முடியாமல் போனால், மக்கள் அதற்கு எதிராக சிறந்த பாடத்தை புகட்டுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வரவு செலவுத் திட்டத்தில், கிராமிய ஏழை மக்கள் நன்மையடைந்து வரும் கூட்டுறவு நிலையத்துக்கும் வரி வித்துள்ளது. இதனை விடவும் அநீதியொன்று கூறுவதற்கில்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  D C
இதனை விடவும் அநீதி இல்லை... பட்ஜெட் பற்றிய மஹிந்த ராஜபக்ஷ எம்.பி.யின் கருத்து இதுதான். இதனை விடவும் அநீதி இல்லை... பட்ஜெட் பற்றிய மஹிந்த ராஜபக்ஷ எம்.பி.யின் கருத்து இதுதான். Reviewed by Madawala News on 11/11/2016 08:51:00 AM Rating: 5