Free Space

காலத்துக்கேற்ற ஒரு கருத்து.. by : சப்வான் பஷீர்


முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவருவதை தடை செய்யக்கோரும் ஆர்ப்பாட்டத்தில் 
ஞானசாரவை தூசனத்தால் தூற்றுவதற்கு எந்தத் தேவையும் இருக்கவில்லை.

எதிரிகளை உருவாக்கி, அவர்களை ஹீரோவாக்கி ஆர்ப்பாட்டம் செய்துதான் "நாம் அல்லாஹ்வுக்கு மட்டும் பயந்தவர்கள்" என்று நிரூபிக்க வேண்டிய 
எந்தத் தேவையும் சமூகத்துக்கு இல்லை.

நிற்க

சகோதரர் ராசிக்கின் கைது உண்மையில் கவலையளிக்கிறது.

சமூகத்துக்கு தேவையான தைரியமும்
நல்ல மொழியாற்றலும் உள்ள இளைஞர் 

அவசரமும், ஆவேசமும்தான் இன்று அவரை உள்ளே தள்ளியிருக்கிறது.

இனியேனும் "ஞானசாரடத் பே நோன சாரடத்பே" என்று சொல்லிவிட்டு "அல்லாஹு அக்பர்" சொல்லும் பாணியில் தஃவா செய்யும் ஸ்டைலை  தவ்ஹீத் ஜமாத் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.

நாட்டில் தைரியமாக சமூகத்துக்காக பேசக்கூடியவர்கள் மிகக்குறைவு. அப்படியான ஒரு சிலரும் உள்ளே 
இருப்பது சமூகத்துக்கு ஆரோக்யமானதல்ல.

ஞானசார மற்றும் அந்த தமிழ் கிராம 
சேவகரை தூற்றிய தேரர் எல்லாம் வெளியே இருக்கும்பொழுது, அப்துர் ராசிக்கை கைது செய்திருப்பதில்
எந்த நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால் இதில் ஒரு பெரிய அரசியல்
இருப்பது மட்டும் நன்றாகப் புரிகிறது.

இந்தக் கைதின் பின்னரேனும்  தவ்ஹீத் ஜமாத் கொஞ்சம் அவசரப்படமால், நிதானமாக செயற்படுவார்கள்
என்று நம்புகின்றோம்.

தவ்ஹீத் ஜமாத்தின் அனுகுமுறையில்
எமக்கு பெரிய முரண்பாடு இருக்கிறது,
அதற்காக அதன் அங்கத்தவர்கள் கைது 
செய்யப்படும்பொழுது கைகொட்டிச் சிரிப்பதென்பது நம் முகத்தில் நாமே உமிழ்ந்து கொள்வதற்குச் சமம்.

எனவே 
சகோதரர் அப்துர்ராசிக் கைது செய்யப்பட்டதற்காக மீண்டும்
ஆர்ப்பாட்டங்களை நடத்த SLTJ முற்பாடமால் இருந்தால் நல்லது. 

கொஞ்சம் நிதானமாக சம்பந்தப்பட்ட தரப்புகளை அனுகி வெளியில் கொண்டுவருவதற்கு முயற்சிப்பார்கள்
என்று நம்புகின்றோம்.

சகோதரர் ராசிக்கிற்காக அனைவரும் பிரார்த்திப்போம்.

கட்டுரை : சப்வான் பஷீர்
காலத்துக்கேற்ற ஒரு கருத்து.. by : சப்வான் பஷீர் காலத்துக்கேற்ற ஒரு கருத்து.. by : சப்வான் பஷீர் Reviewed by Madawala News on 11/16/2016 06:44:00 PM Rating: 5