திகன பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதிக வலு ஆடம்பர கார் சிக்கியது.



ஒரு கோடி ரூபாவுக்கும் மேலதிக பெறுமதி கொண்ட அதிக வலுவடைய மோட்டார் வாகனம் ஒன்று விசேட பொலிஸ் குழுவினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

திகன பிரதேசத்தில் வசிக்கும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கார் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த புதிய மோட்டார் வாகனத்திற்கு தீர்வை வரி செலுத்தாமல் இரகசியமாக சுங்க பிரிவினால் விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது.

இதனையடுத்து விசாரணை நடவடிக்கைகளுக்காக கொழும்பிற்கு வந்த விசேட பொலிஸ் குழுவினால், இந்த மோட்டார் வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 14ஆம் திகதி மாலை திகன மிலேனியம் சிட்டி வீட்டுத் தொகுதியில் அமைந்துள்ள கோடீஸ்வர வர்த்தகரின் வீட்டில் இருந்து வாகனம் மீட்கப்பட்டுள்ளது.

அதிக விலையுடனான இந்த வாகனம் குறித்த வர்த்தகருக்கு கிடைத்ததெப்படி? இது தொடர்பில் அரசியல் பின்னணி உள்ளதா? என விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த மோசடி குறித்து கோடீஸ்வரரிடம் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

திகன பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதிக வலு ஆடம்பர கார் சிக்கியது. திகன பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதிக வலு ஆடம்பர கார் சிக்கியது. Reviewed by Madawala News on 11/18/2016 07:47:00 PM Rating: 5