Free Space

CCTV இணைப்பு... கம்பளை விபத்தில் 19 வயது எம்.ஜே.எம். அம்ஜத் உயிரிழந்தார்.



-எம்.எம்.எம். ரம்ஸீன்-
கம்பளை கஹட்டபிடியவில் நேற்று  11.11.2016 வெள்ளிக்கிழமை மாலை 7. 00 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் - வேன்  விபத்தில் பத்தொன்பது வயது இளைஞனொருவன் உயிரிழந்துள்ளார்.


கம்பளை நகரில் இருந்து கெலிஓயா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில்  வேனொன்றில் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்  முறுத்தகஹமுல்ல அம்தரவல்ல  பகுதியை சேர்ந்த எம்.ஜே.எம். அம்ஜத் என்ற இளைஞன் ஆவார்.

இவர் மோட்டார் சைக்கிளில் கம்பளையில் இருந்து கெலிஓயாவுக்கு சென்று கொண்டிருந்த போது கஹட்டபிடிய பகுதியில்  முன்னால் சென்றுக் கொண்டிருந்த வேனை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிரே வந்த லொறியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த இளைஞன்  கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய இளைஞன் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்விபத்தில் உயிரிழந்த இளைஞனின் ஜனாஸா  கம்பளை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மரண விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்விபத்து தொடர்பாக கம்பளை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CCTV இணைப்பு... கம்பளை விபத்தில் 19 வயது எம்.ஜே.எம். அம்ஜத் உயிரிழந்தார். CCTV இணைப்பு... கம்பளை விபத்தில் 19 வயது  எம்.ஜே.எம். அம்ஜத் உயிரிழந்தார். Reviewed by Madawala News on 11/12/2016 07:57:00 AM Rating: 5