சிறுமி துஷ்பிரயோக வழக்கு... பங்களாதேஷ் கிரிக்கட் வீரருக்கும் மனைவிக்கும் எதிரான வழக்கில் வந்த தீர்ப்பு இதுதான்.



பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹொசைன் மற்றும் அவரது மனைவி துஷ்பிரயோக வழக்கில் இருந்து  விடுதலை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹொசைன். இவர் 38 டெஸ்ட் போட்டியிலும், 51 ஒருநாள் போட்டியிலும் விளையாடியுள்ளார்.

இவரது மனைவி நிரிட்டோ ஷகாதத்.

இந்த வழக்கு தொடர்பாக அரசு தரப்பில் 7 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். இதில் ஒருவர் பாதிக்கப்பட்ட சிறுமியும் ஒருவர். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ந் திகதி கோர்ட்டில் சாட்சியளிக்கும்போது, ஷகாதத் மற்றும் அவரது மனைவி என்னை துன்புறத்தவில்லை என்றார்.

இதனால் இருவருக்கும் எதிராக குற்றச்சாட்டை அரசு தரப்பு நிரூபிக்க தவறிவிட்டது எனக்கூறி கோர்ட் இருவரையும் விடுதலை செய்துள்ளது.

பங்களாதேஷ்  கிரிக்கட் வாரியம் ஏற்கனவே கடந்த மே மாதம் மனிதாபிமான அடிப்படையில் அவர் மீதான தடையை ரத்து செய்தது.
சிறுமி துஷ்பிரயோக வழக்கு... பங்களாதேஷ் கிரிக்கட் வீரருக்கும் மனைவிக்கும் எதிரான வழக்கில் வந்த தீர்ப்பு இதுதான். சிறுமி  துஷ்பிரயோக வழக்கு... பங்களாதேஷ் கிரிக்கட் வீரருக்கும் மனைவிக்கும் எதிரான வழக்கில் வந்த தீர்ப்பு இதுதான். Reviewed by Madawala News on 11/06/2016 07:27:00 PM Rating: 5