Accaddemy

மத்திய மாகாண சபையிலிருந்து இன்று ஊடகவியலாளர்கள் வெளியேற்றம் .



-ஜே.எம்.ஹபீஸ்-

மத்திய மாகாண சபையின் மாதாந்த அமர்வு பல்லேகலை மாகாண சபை மண்டபத்தில் சபைத் தலைவர் எல்.டி.நிமலசிரி தலைமையில் இன்று கூடியது. முதல் நடவடிக்கையாக சபைத் தலைவர் பின்வருமாறு அறிவித்தார்.

ஊடக வியளார்களது கவனத்திற்கு இதனைத் தெரிவிக்க விரும்புகிறேன்.சபையில் எதிரணித்தலைவி மற்றும் ஆளும் தரப்பு, மாகாண அமைச்சர்கள் உற்பட சகல தரப்பினதும் வேண்டு கோளின் படி இன்று(8.11.2016) பி.ப.1.00 மணிக்கு ஊடக வியலாளர்களை ஒரு ஊடக சந்திப்பில் கலந்துரையாட உள்னோம்.

அதன் பின் ஊடக வியலானர்கள் சபைக்கு சமூகமளித்து செய்திகளை சேகரிக்க முடியும். அது வரை செய்தி சேகரிக்க வந்துள்ள ஊடக வியலாளர்களை அவர்களது ஊடக கூடத்தில் இருந்து வெளியேறுமாறு வேண்டுகிறேன் என்றார்.

இதனை அடுத்து அங்கு செய்தி சேகரிக்க வந்திருந்த சுமார் 20 அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடக வியலாளர்கள் சபை ஊடக கூடத்திலிருந்து வெளியேறினர்.

அதே நேரம் கடந்த அமர்வின் போது ஒரு சில ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பாக சபையில் பிரஸ்தாபிக்கப்பட்ட போது ஊடக வியலாளர்களது நலனை அது பாதிப்பதாகக் கூறி ஊடக வியலாளர்கள் சபையை விட்டும் வெளிநடப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கது.


மத்திய மாகாண சபை அங்கத்;வர்கள் ரஷ்யாவிற்கு மேற்கொண்ட சுற்றுப் பயணம் தொடர்பாக செய்தி வெளியிட்டமை உற்பட இன்னும் சில செய்திகள் தொடர்பாக சபை அங்கத்தவர்கள் மற்றும் மாகாண அமைச்சர் எதிரிவீர வீரவர்தன உற்பட பலர் அதிருப்தி வெளியிட்டு உரையாற்றிமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதன் அடிப்படையிலே முறுகள் நிலை உருவானது என்பதும் குறிப்பிடத்ததக்கது.

அதே நேரம் மாகாண சபைக்கு செய்தி நேகரிக்கச் செல்லும் சகல ஊடக வியலாளர்களுக்கும் சபை அமர்வுகள் தொடர்பாக செய்திகளை சேகரிக்க வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மத்திய மாகாண சபையிலிருந்து இன்று ஊடகவியலாளர்கள் வெளியேற்றம் . மத்திய மாகாண சபையிலிருந்து  இன்று ஊடகவியலாளர்கள் வெளியேற்றம் . Reviewed by Madawala News on 11/08/2016 11:51:00 AM Rating: 5