Ad Space Available here

நீதித்துறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.. நாற்பதாயிரம் திர்ஹம் நஷ்டஈடு பெற்ற பாணந்துரை சகோதரர். d


- ரஸானா மனாப்-

எனக்கு நன்கு அறிமுகமான பாணந்துறை சகோதரர் ஒருவர் அபுதாபியில் இருக்கும் பாதுகாப்பு நிறுவனமொன்றில் கடந்த எட்டு வருடமிருந்து பாதுகாப்பு ஊழியராக வேலை பார்த்து வந்தார்.., 

அவர் வேலை செய்வது இராணுவ ஆயுத கிடங்கு பகுதியில் இருக்கும் நுழைவாயிலில், உத்தியோகபற்றற்றவர்கள் நுழைவதற்கு தடைசெய்யப்பட்ட அந்த பிரதேசத்தில் ஒரு காகம், குருவி கூட நுழைய முடியாது. 

ஒரு நாள் வெள்ளிக்கிழமை, யாருமற்ற அந்த நேரத்தில் வேகமாக நுழைவாயிலை நோக்கி வந்த பென்ஸ் காரொன்று சர்ரென்று பிரேக் அடித்து நின்றது, யாராக இருக்கும் என்று நினைத்த நண்பர் உடனடியாக அந்த காரை நோக்கி செல்லவில்லை, காரிலிருந்து யாரும் இறங்கி வருவதாகவும் இல்லை மூடியிருந்த எலக்ரோனிக் கேட்டிற்கு மறுபக்கமாக நின்ற காரிலிருந்து யாராவது இறங்கி வருகிறார்களா என்று தாமதித்து பார்த்தார் நண்பர்.

சுமார் இருபது நிமிடங்கள் கழித்து கந்தூரா அணிந்த ஒரு அரேபிய இளைஞன் கோபமாக காரைவிட்டு இறங்கி வந்து கேட்டை திறக்கும்படி சத்தமிட்டான், இந்த பகுதியில் நுழைவதற்கு யாருக்கும் அனுமதியில்லை என்றும் திரும்பி சென்று விடும்படியும் தாழ்மையாக கேட்டுக்கொண்ட நண்பர் மீது இன்னும் கோபம் கொண்டான் அந்த இளைஞன் (சில கோடிஸ்வர அரேபிய இளைஞர்களுக்கு தலைக்கனம் அதிகம்) அவனின் சகோதரன் இராணுவத்தில் உயர் பதவி வகிப்பதாகவும் அவரை சந்திக்கவே தான் வந்திருப்பதாகவும் சொன்னான் அவன், நண்பர் மடியவில்லை யாராக இருந்தாலும் இந்த பிரதேசத்தில் சந்திக்க முடியாதென்றும் தனது கடமைக்கு இடைஞ்ஞல் செய்யாமல் நகரும்படியும் கேட்டுக்கொண்டவர் மீது எதிர்பாராத விதமாக தாக்குதல் நடத்திவிட்டான்.

நிலைகுலைந்த நண்பர் சுதாகரித்துக்கொண்டு 999 என்ற அவசர பொலிஸ் இலக்கத்தை அழைத்து பொலிஸ் முறைப்பாடு செய்வதற்கிடையில் வந்த இளைஞன் பென்சை திருப்பிக்கொண்டு சிட்டாக பறந்துவிட்டான் அடுத்த சில நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு வருகை தந்த போலிஸ் நடந்த விடயங்களை நண்பரிடம் இருந்து வாக்குமூலமாக பதிவு  செய்துகொண்டு CCTV தரவுகளையும் எடுத்துக்கொண்டு சென்று விட்டார்கள், CCTV தரவுகளை பரிசோதித்தபோது அரேபிய இளைஞன் தாக்கியது நிரூபணமாகி விட கேஸ் நீதிமன்றத்துக்கு சென்றது.

நண்பரின் சார்பாக பப்ளிக் ப்ரோசிகியூட்டர் ஆஜராக அரேபிய இளைஞனின் சார்பாக யாரும் ஆஜராகவில்லை ஏனெனில் ஒருவர் குற்றம் செய்தார் என்று நூறுவீதம் உறுதியானால் அவரின் சார்பாக எந்த வக்கீலும் வரமாட்டார்கள் வாதாட பொய்க்காக யாரும் வாதாடுவதில்லை. வழக்கின் முதல் தவணையில் போலிஸ் தரப்பு சமர்ப்பித்த வீடியோ ஆதாரங்களை பரீசிலித்து குற்றத்தை உறுதியாக்கி கொண்ட நீதிமன்றம்  தீர்ப்பை இரண்டாவது தவணைக்கு தள்ளி வைத்தது.

சில நாட்கள் கழித்து இரண்டாவது தவணையில் பாதிக்கப்பட்ட நண்பருக்கு நாற்பதாயிரம் திர்ஹம் (இலங்கை நாணயத்தில் பதினாறு லட்சம் ரூபாய்) நஷ்டஈடு செலுத்த சொல்லி தீர்ப்பளித்தது. இளைஞனின் குடும்பம் அரச செல்வாக்கு நிறைந்ததாக இருந்தும்கூட நீதி துறையில் அவர்களுக்கு ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அடுத்து வந்த இரண்டு தினங்களுக்குள் நண்பரின் கைகளுக்கு காசோலை ஒன்று கிடைத்தது.

##நமது நாடாக இருந்திருந்தால் ''அடிபட்டவன்'' கம்பி எண்ணுவான் அடித்தவன் ஜாலியாக வெளியில் கேர்ள் பிரண்டோட ஊர் சுற்றுவான்##

(படம் : அடையாளத்துக்காக சேர்க்கப்பட்டது)
நீதித்துறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.. நாற்பதாயிரம் திர்ஹம் நஷ்டஈடு பெற்ற பாணந்துரை சகோதரர். d நீதித்துறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.. நாற்பதாயிரம் திர்ஹம் நஷ்டஈடு பெற்ற பாணந்துரை சகோதரர். d Reviewed by Madawala News on 11/17/2016 05:11:00 PM Rating: 5