Ad Space Available here

"தம்­புள்ளை ஹைரியா பள்ளியவாசல்" முஸ்லிம் அரசியல் தலைவர்களும் அமைச்சர்களும் மந்த கதி.25 -01-2016  அஸ்­கி­ரிய மகா­நா­யக்க தேரர் கல­கம ஸ்ரீ ஹத்­த­திஸ்ஸ  வேண்­டுகோள் ஒன்றை  விடுத்­தார்

தம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வா­சலுக்கு அரு­கா­மையில் வசித்து வரும் மக்கள் தமக்குத் தேவை­யான காணி அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­படும் வரை அவ்­வி­டத்­தி­லி­ருந்து வெளி­யேற வேண்­டா­மென அஸ்­கி­ரிய மகா­நா­யக்க தேரர் கல­கம ஸ்ரீ ஹத்­த­திஸ்ஸ அம்­மக்­க­ளிடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.


அஸ்­கி­ரிய பீடா­தி­பதி கல­கம ஸ்ரீ ஹத்­த­திஸ்ஸ தேரர் தம்­புள்ளை மெத­வி­கா­ரைக்கு விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்­டி­ருந்த வேளை தேரரை தம்­புள்­ளையில் காணி இழந்தோர் சங்கத் தலைவர் மஞ்­சுள தயா­னந்த உட்­பட காணி இழந்தோர்கள் சிலர் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினர். குறித்த கலந்­து­ரை­யா­டலின் போதே குழு­வி­ன­ரிடம் தேரர் இந்த வேண்­டுகோளை விடுத்தார்.

அந்த  கலந்­து­ரை­யா­டலின் போது மகா­நா­யக்க தேரர் மேலும் குறிப்­பிட்­ட­தா­வது,
நீண்­ட­ கா­ல­மாகக் குடி­யி­ருக்கும் உங்­களை நினைத்­த­வாறு அவ்­வி­டத்­தி­லி­ருந்து அக­லு­மாறு கட்­ட­ளை­யிட முடி­யாது.தேவை­யான காணி இனம் காணப்­பட்ட பின்பே அவ்­வாறு கோரிக்கை விடுக்க முடியும். நான் பத­வியில் இருக்கும் வரை உங்­களை எவ­ராலும் நினைத்­த­வாறு அப்­பு­றப்­ப­டுத்த முடி­யாது. இது தொடர்­பாக நான் ஜனா­தி­ப­தி­யுடன் பேச்­சு­வார்த்தை நடாத்­த­வுள்ளேன் என அவர் தெரிவித்திருந்தார்

பள்ளியை  சூழவுள்ள   107 குடும்­பங்­களில் 86 குடும்­பங்கள் நஷ்ட ஈடு வழங்­கு­வ­தற்­காக தம்­புள்ளை பிர­தேச செய­லாளர் காரி­யா­ல­யத்­திற்கு அழைக்­கப்­பட்­டி­ருந்­தனர். இவர்­களில் 3 குடும்­பங்­களுக்கே நஷ்ட ஈட்டுத் தொகை­யாக தலா 2 இலட்சம் ரூபாவைப் பெற்­றுக்­கொண்­டனர். ஏனைய குடும்­பங்கள் தமக்­கான காணியை இனம் காட்­டாமல் நஷ்ட ஈட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ளமாட்டோம் என்று நிரா­க­ரித்­தனர்.
நஷ்ட ஈட்டுத் தொகையைப் பெற்­றுக்­கொண்ட 3 குடும்­பங்­களில் ஒரு குடும்பம் நஷ்ட ஈட்டுத் தொகையை திருப்பி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கையளித்துள்ள இந்நிலையிலே தம்புள்ளை மெதவிகாரைக்கு விஜயம் செய்த அஸ்கிரிய பீடாதிபதியை பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சந்தித்துள்ளனர்.

தம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வா­ச­லுக்கும் பள்­ளி­வாசல் பிர­தே­சத்தில் தற்­போது குடி­யி­ருக்கும் குடும்­பங்­க­ளுக்கும் அப்­பி­ர­தே­சத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டுள்ள குடும்­பங்­க­ளுக்கும் தம்­புள்ளை பொல்­வத்­தயில் காணிகள் வழங்­கு­வ­தற்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளதாக  அறிவித்தார்கள்

கடந்த  ஒக்டோபர் 10 ஆம் திகதி கொழும்பில் ஐ.நா.காரி­யா­ல­யத்தில் RRT அமைப்பு ஏற்­பாடு செய்­தி­ருந்த முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளுக்கும்; ஐ.நா.நிபுணர் ரீட்டா ஐசாக் நதே­யா­வுக்­கு­மி­டை­யி­லான சந்­திப்­பின்­போது தம்­புள்ளை பள்­ளி­வா­சலின்  சார்பில் அதன் நிர்­வாக சபை உறுப்­பினர் எம்.ஏ.ரஹ்­மத்­துல்லாஹ் கலந்து கொண்டு பள்­ளி­வாசல் பிரச்­சி­னை­களைத் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. அவர் பள்­ளி­வாசல் தொடர்­பான ஆவ­ணங்­க­ளையும் சமர்ப்­பித்­தி­ருந்தார்.

இதே­வேளை 2012 ஆம் ஆண்டு பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து  பள்­ளி­வா­சலைக் காப்­பாற்றிக் கொள்­வ­தற்குப் போராடி வரு­கிறோம். இதற்­காக பல அர­சியல்  தலை­வர்­களை நாடியும் இது­வரை எது­வித பலனும் கிடைக்­க­வில்லை. அதனால் ஐக்­கிய நாடுகள் சபை இதில் தலை­யிட்டு தீர்த்துத் தர­வேண்­டு­மெ­னவும் கோரி­யி­ருந்தார்.

தம்­புள்ளை பள்­ளி­வா­சலை அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்றிக் கொள்­வ­தற்கு  இது­வரை பொருத்­த­மான  காணி­யொன்று வழங்­கப்­ப­ட­வில்லை. நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பை­யினால் இனங்­கா­ணப்­பட்­டுள்ள காணி மது­பா­ன­சா­லைக்கு அருகில் அமைந்­துள்­ளதால் அக்­கா­ணிக்கு பள்­ளி­வாசல் நிர்­வா­கமும் பொது­மக்­களும் எதிர்ப்புத் தெரி­வித்­துள்­ளார்கள்.

இதே­வேளை புதி­தாக வேறோர் மாற்­றி­டத்தில் பள்­ளி­வா­சலை அமைப்­ப­தா­யி­ருந்தால் 2 ஏக்கர் காணியும் தற்­போது பள்­ளி­வா­ச­லுக்கு அரு­கா­மையில் வாழும் 17 குடும்­பங்­க­ளுக்கு வீடுகள் அமைப்­ப­தற்­கான காணி­களும் வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென  பள்­ளி­வாசல் நிர்­வாகம் நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பை­யிடம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை தற்­போது பள்­ளி­வா­ச­லுக்கு  அருகில் வாழும் குடும்­பங்­க­ளுக்கு மிகவும் குறைந்த தொகை நஷ்­ட­யீட்­டினை வழங்கி அவர்­களை அவ்­வி­டத்­தி­லி­ருந்தும் வெளி­யேற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கைகளை முன்­னெ­டுத்து வருகின்றது.

பள்­ளி­வாசல் நிர்­வாகம் அமைச்­சர்­க­ளான கபீர்­ஹாஷிம், எம்.எச்.ஏ.ஹலீம்  ஆகி­யோ­ரி­டமும் முறைப்­பா­டு­களைச் சமர்ப்­பித்­துள்­ளன.
முஸ்லிம் அரசியல் தலைவர்களும் அமைச்சர்களும் மந்த கதியிலே செயற்படுவதால் ஐ.நா.நிபுணரின் தயவை  நாடவேண்டியேற்றபட்டதாகவும் தெரிவித்தார்.


தம்­புள்ளை புனி­த­பூ­மியில் முஸ்­லிம்கள் புதி­தாக பள்­ளி­வா­ச­லொன்றை நிர்­மாணிப்­ப­தற்கு எதி­ராக தம்­புள்­ளையில் எதிர்­வரும் 19ஆம் திகதி ஆர்ப்­பாட்­ட­மொன்­றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள்  பாட்டம் தொடர்­பான அழைப்­புகள் சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் முக­நூ­லிலும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

இலங்கை சர்வதேச ரீதியாக பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ள வேளை பள்ளிவாசல் ஒன்று தாக்கப்பட்டு அதனை அகற்றுமாறு ஊர்வலம் செல்வது போன்ற நிகழ்வுகள் இந்த நாட்டை சிக்கலுக்குள் மாட்டக் காத்திருக்கும் சக்திகளுக்கு நாமே கதவைத் திறந்து கொடுப்பது போன்றதாக இருக்கும்.
தர்மத்தைப் பேணும் பள்ளிவாசல் ஒன்றுக்குக் கூட இந்த நாடு அங்கீகாரம் அளிக்க மறுக்கின்றது என்று பிரச்சாரம் செய்ய முற்படுவதற்கு இவ்வாறான சம்பவங்கள் தொடர இடமளிப்பதால் பிரச்சாரம் செய்வதற்கு நாமே வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்.

ஷீஆ,சியோனிச சக்திகளது கரங்கள் என்றுமில்லாதளவுக்கு இந்த நாட்டில் பலம் பெற்றுள்ள நிலையில் இவ்வாறான நிகழ்வுகள் இல்லை என்று நிராகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான ஒரு சதியை முறியடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சதி பற்றிக் குறிப்பிடும் முஸ்லிம் தலைவர்கள்  அரசினை வற்புறுத்த வேண்டும். ஏன் அவ்வாறு செய்யாதிருக்கிறார்கள்.

சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அரசை வலியுறுத்த வேண்டும்.

இந்த விடயங்களில் சட்டமும் நீதியும் நிலைநாட்டப்படாது மென்மைப் போக்கினை கடைப்பிடித்தால் இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற இடமுண்டு. இது குறித்து அரசு விழிப்பாக இருக்க வேண்டும்.
உருவாகும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதனை ஒத்திப்போடாது உடன் தீர்வு காண முற்பட வேண்டும். கடந்த ஒரு மாத காலத்துக்குள் கிண்ணியா,அம்பாறை,சம்பவங்களால் இந்த நாட்டின் முஸ்லிம் சமூகம் அதிர்ச்சியடைந்துள்ளது. அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்ற அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் தனித் தனியாக சில நடவடிக்கைகளை எடுத்தாலும் ஒன்றுபட்டு இந்தப் பிரச்சினைகளை எதிர் நோக்காதது குறித்து கவலை கொண்டுள்ளது. சமூகத்தின் இருப்போடு தொடர்பான விசயமாக இருப்பதனால் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் ஒன்றுபட்டுச் செயற்படுவது அவசியமாகும்.

பிரச்சினைகளை சிவில் தலைமைத்துவத் திற்கு விட்டு விட்டு முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் ஒதுங்குகின்றதா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது.

முஸ்லீம்  சார்பான  தொண்டு  நிறுவனங்களுக்கு  சிவில் தலைமைத்துவத்தின் பணி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களால் ஓர் எல்லைக்குத்தான் செல்ல முடியும். இந்த நிலையில் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் ஒன்றுபட்டு இவ்வாறான சம்பவங்கள் தொடராதிருப்பதற்கு ஆக்கபூர்வமான சில செயற்பாடுகளை அரசு மூலம் செய்வதற்கு உடனடியாக ஆவன செய்ய வேண்டும்.

அவ்வாறு தவறும் பட்சத்தில் தம்புள்ளை, குருநாகல், தெஹிவளை எனத் தொடரும் சம்பவங்களது பட்டியல் மேலும் நீடிக்க இடமுண்டு.
  
உக்குவெல  அஸ்லாம்
      கத்தார்
"தம்­புள்ளை ஹைரியா பள்ளியவாசல்" முஸ்லிம் அரசியல் தலைவர்களும் அமைச்சர்களும் மந்த கதி. "தம்­புள்ளை ஹைரியா பள்ளியவாசல்"  முஸ்லிம் அரசியல் தலைவர்களும் அமைச்சர்களும் மந்த கதி. Reviewed by Madawala News on 11/14/2016 08:32:00 AM Rating: 5