Accaddemy

டான் பியசாத்துக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு.



இனவாதத்தை தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட டேன் பியசாத் என்ற பெயரில் பேஷ்புக்கில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் லியனகே அபேரத்ன பியசாத் என்பவருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

முஸ்லிம்கள் மற்றும் தவ்ஹித் ஜமாத் அமைப்புக்கு எதிராக பேஷ்புக்கில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்த பியசாத் மதங்களுக்கு இடையில் பேதங்களை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் பிணை கோரி தாக்கல் செய்திருந்த மனுவை கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன நிராகரித்துள்ளார்.

சந்தேகநபர் வெளியிட்ட கருத்துக்கள் மூலம் அவர் மதங்களுக்கு இடையில் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் இப்படியான கருத்துக்கள் மூலம் மக்கள் மத்தியில் கொந்தளிப்புகள் ஏற்படும் எனவும் கூறிய நீதவான், பிணை கோரிக்கையை நிராகரித்ததுள்ளார்.
டான் பியசாத்துக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு. டான் பியசாத்துக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு. Reviewed by Madawala News on 11/23/2016 04:10:00 PM Rating: 5