டொனால்ட் ட்ரம்ப் கடும்போக்காளர் இல்லை.. அவரின் வெற்றியால் உலக சமா­தா­னம் ஏற்படும்.. : இலங்கை அரசாங்கம்.



அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்­றி­பெற்­றது  நல்ல விடயம். அவர் வெற்­றி­பெ­றுவார் என நாம் அறிந்­தி­ருந்தோம். அவர் தேசி­யத்தை கையில் எடுத்து பிர­சாரம் செய்தார். உலக சமா­தா­னத்­திற்கு அவரின் வெற்றி சிறந்­த­தாக அமையும். அமெ­ரிக்­காவின் புதிய தலை­மைத்­துவம் ஏனைய நாடு­களின் விட­யத்தில் தலை­யி­டாமல் இருந்தால் நல்­லது என்று அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.  

அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அமைச்சர் அங்கு ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளினால் எழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கையில் :-

கேள்வி:- அமெ­ரிக்­காவின் புதிய ஜனா­தி­ப­தி­யாக குடி­ய­ர­சுக்­கட்­சியின் டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார். இது தொடர்பில்:

பதில்:- அவர் வெற்­றி­பெற்­றது நல்ல விடயம். அவர் வெற்­றி­பெ­றுவார் என நாம் அறிந்­தி­ருந்தோம். அவர் தேசி­யத்தை கையில் எடுத்து பிர­சாரம் செய்தார். அமெ­ரிக்­காவின் அடி­மட்ட மக்­க­ளுக்கு உரை­யாற்­றினார். அதில் வெற்­றி­ய­டைந்­துள்ளார். அவர் வெற்­றி­பெ­றுவார் என நான் நினைத்தேன். சாதா­ரண மக்­களை அவர் நாடிச்­சென்றார். உலக சமா­தா­னத்­திற்கு அவரின் வெற்றி சிறந்­த­தாக அமையும். அமெ­ரிக்­காவின் புதிய தலை­மைத்­துவம் ஏனைய நாடு­களின் விட­யத்தில் தலை­யி­டாமல் இருந்தால் நல்­லது. அல்லது அமெரிக்காவின் முழு அதிகார கோட்டையும் ஹிலாரியின் பக்கமே இருந்தது. ஆனால் அடிமட்டத்திற்குச் சென்ற ட்ரம்ப் வெற்றியீட்டியுள்ளார். இது ஒரு சிறந்த உதாரணம்.

கேள்வி:- கடும்­போக்­காளர் ஒருவர் வெற்­றி­பெற்­றுள்­ளாரே?

பதில்:- இல்லை. அவரை கடும்­போக்­காளர் என்று எவ்­வாறு கூற­மு­டியும். ஒரு­சில கருத்­துக்­களை அவர் வெளி­யிட்டார். தற்­போது பிரிட்டன் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து வெளி­யே­றி­யதை எடுத்­துக்­கொள்வோம். நீங்கள் லண்­ட­னுக்கு சென்று ஐந்து பேரை சந்­தித்தால் அதில் நால்வர் வேறு நாடு­களைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருப்பர். இதுதான் உண்மை நிலைமை. இத­னைப்­பற்றி பேசினால் கடும்­போக்­காளர் என்று கூற முடி­யுமா? எனவே ட்ரம்ப் கடும்­போக்­காளர் என்று கூற­மு­டி­யாது. சற்று வித்தியாசமான போக்கு இருக்கும் தேசியம் நல்­லது. ஆனால் இன­வா­தம்தான் சரி­யல்ல.

கேள்வி:- அமெ­ரிக்­காவில் சிறு­பான்­மை­யி­னத்தை விமர்­சித்த ஒருவர் ஜனா­தி­ப­தி­யா­கி­யுள்ளார். அப்­ப­டி­யாயின் இலங்­கை­யிலும் அவ்­வா­றான நிலைமை எதிர்­கா­லத்தில் ஏற்­ப­டுமா?

பதில்:- அவ்­வாறு ஒன்றும் ஏற்­ப­டாது. அங்கு நிலைமை வேறு இங்கு நிலைமை வேறு. இங்கு அவ்வாறு ஒன்றும் செய்ய முடியாது. நாங்களும் ஒற்றுமையுடன் தேசியத்தை வளர்க்கின்றோம்.

கேள்வி:- ட்ரம் வெற்­றி­பெற்றால் இலங்­கையில் கோல்ப் மைதா­ன­மொன்றை அமைத்­துக்­கொ­டுப்­ப­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறி­யுள்­ளாரே?

பதில்:- அது எனக்குத் தெரியாது ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமெரிக்காவின் குடியரசுக்கட்சியுடன் நெருங்கிய தொடர்பை கொண்டவர்.

கேள்வி:- அப்படியாயின் கோல்ப் மைதானம் அமையுமா?

பதில்:- பிரதமர் அவ்வாறு கூறியிருந்தால் அமைப்பார்.
டொனால்ட் ட்ரம்ப் கடும்போக்காளர் இல்லை.. அவரின் வெற்றியால் உலக சமா­தா­னம் ஏற்படும்.. : இலங்கை அரசாங்கம். டொனால்ட்  ட்ரம்ப் கடும்போக்காளர் இல்லை.. அவரின் வெற்றியால் உலக சமா­தா­னம் ஏற்படும்.. : இலங்கை அரசாங்கம். Reviewed by Madawala News on 11/10/2016 09:46:00 AM Rating: 5