பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்கும் மசோதாவுக்கு டொனால்டு டிரம்ப் ஒப்புதல் அளிப்பார்.



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் 

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெட் போஇ டானா ரோக்ராபாட்சர் ஆகியோர் பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்கும் மசோதாவை முன்வைத்தது உள்ளனர்.

தற்போது அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக குடியரசுக் கட்சியின் டொனால்டு டிரம்ப் தேர்வாகியுள்ளார். 2017 ஆம் ஆண்டு  ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ளார்.

இந்த நிலையில் பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்கும் நாடாளுமன்ற மசோதாவுக்குத்டொனால்டு டிரம்ப் ஒப்புதல் அளிப்பார் என்று டொனால்டு டிரம்ப் ஆலோசனைக் குழு உறுப்பினரும் மற்றும் பிரபல தொழிலதிபருமான ஷலாப் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும் போது அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்  டிரம்ப்புக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நல்ல நட்பு வளரும் என்பதில் சந்தேகமில்லை என்று டிரம்ப்பின் தலைமைத்துவத்தின்கீழ், அமெரிக்க- இந்திய உறவு இதுவரையில்லாத அளவில் வலிமையடையும்.என கூறினார்.
பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்கும் மசோதாவுக்கு டொனால்டு டிரம்ப் ஒப்புதல் அளிப்பார். பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்கும் மசோதாவுக்கு டொனால்டு டிரம்ப் ஒப்புதல் அளிப்பார். Reviewed by Madawala News on 11/17/2016 07:02:00 PM Rating: 5