இரண்டு பேர் தப்பிச் சென்றனர்.. சிக்கிய இலங்கையருக்கு துபாயில் சிறைத் தண்டனை.



ஒரு மில்லியன் திர்ஹாம் பெறுமதி மிக்க பொருட்களை விற்பனை செய்த இலங்கையர் ஒருவர் உட்பட்ட மூன்று பேருக்கு தலா ஒரு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி இந்த மூவரும், உரிமையாளர் வெளிநாடு சென்றிருந்த போது துபாய் விருந்தகம் ஒன்றில் இருந்து குறித்த  திருட்டுத்தனமான விற்பனையில்  ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதில் இலங்கையர் துபாயில் இருந்து இலங்கைக்கு தப்பிச் செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவருக்கான சிறைத் தண்டனை முடிந்தவுடன் நாடு கடத்தப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

எனினும் ஏனைய இருவரும் பெறுமதிக்க பொருட்களுடன் துபாயில்  இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் அவர்கள் பிரசன்னமாகாத போதும் நீதிமன்றத்தினால் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டு பேர் தப்பிச் சென்றனர்.. சிக்கிய இலங்கையருக்கு துபாயில் சிறைத் தண்டனை. இரண்டு பேர் தப்பிச் சென்றனர்.. சிக்கிய இலங்கையருக்கு துபாயில்  சிறைத் தண்டனை. Reviewed by Madawala News on 11/29/2016 10:17:00 AM Rating: 5