tg travels

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம் அளித்த பின்னர் இத்தாலியில் அடிக்கடி நிலநடுக்கமும் பயங்கர அழிவுகளும்..



ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம் அளித்ததால்தான் இத்தாலியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதாக கத்தோலிக்க வானொலி மூலம் கருத்து தெரிவித்த தொகுப்பாளருக்கு கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமைப்பீடமான வாடிகன் அரண்மனை கண்டனம் தெரிவித்துள்ளது.

இத்தாலி நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு சுமார் 300 பேர் பலியாகினர். அதைதொடர்ந்து கடந்த ஒக்டோபர் மாதம் இத்தாலியில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் உயிர்பலிகளை ஏற்படுத்தாவிட்டாலும், ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ தேவாலயங்கள் இடிந்து, ஏராளமான பொருட்சேதம் ஏற்பட்டது.

இப்படி தொடர்ந்து நிகழ்ந்துவரும் நிலநடுக்கம் தொடர்பாக கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கான வானொலியான 'ரேடியோ மரியா' மூலமாக கருத்து தெரிவித்த நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர், 'இவை எல்லாம் மனிதர்களின் பாவத்துக்கு கடவுள் அளித்துவரும் தண்டனைகள். கடந்த மே மாதம் நமது நாடு ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம் அளித்த பிறகு இதைப்போன்ற தண்டனைகள் அதிகரித்து வருகின்றன' என குறிப்பிட்டார்.

இதைகேட்ட பலதரப்பினர் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்ததாக முன்னர் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கான வானொலியான 'ரேடியோ மரியா' மூலம் இதைப்போன்ற கருத்து தெரிவித்த தொகுப்பாளருக்கும், வானொலி நிலையத்துக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமைப்பீடமான வாடிகன் அரண்மனை கண்டனம் தெரிவித்துள்ளது
ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம் அளித்த பின்னர் இத்தாலியில் அடிக்கடி நிலநடுக்கமும் பயங்கர அழிவுகளும்.. ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம் அளித்த பின்னர் இத்தாலியில் அடிக்கடி நிலநடுக்கமும் பயங்கர அழிவுகளும்.. Reviewed by Madawala News on 11/05/2016 09:49:00 PM Rating: 5