(படங்கள்) ஊருக்குள் புகுந்த யானைகள் அட்டகாசம்.. பெண்கள் , குழந்தைகள் கடும் அச்சத்தில்.



ஏ.எஸ்.எம்.தாணீஸ்

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் ஜின்னா நகர்,முன்னம்போடி வெட்டை குடியிருப்பு பகுதிக்குள் 03 காட்டு யானைகள் நேற்றிரவு 05  உட்புகுந்ததனால் அப்பிரதேச மக்கள் பெரும் பீதியில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


ஊருக்குள் புகுந்த யானைகள் இதுவரை பயன்தரக்கூடிய 100 க்கும் மேற்பட்ட தென்னை மரங்களையும்,வாழை மரங்களையும் அடித்து துவம்சம் செய்துள்ளதோடு பாரிய நஷ்ட்டத்தையும் விளைவித்துள்ளன.


அதேவேளை இற்றைவரை யானைகள் ஊருக்குள்ளேயே தஞ்சமடைந்துள்ளதாகவும்,பீதியினால் குடியிருப்பிளுள்ள மக்கள் இடம் பெயர்ந்து தொலைவில் உள்ள வீடுகளுக்கு சென்றுள்ளதாகவும்,சிறுவர்கள்,பெண்கள் அச்சத்தில் இருந்து வருவதாக அப்பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.


கடந்த பல நாட்களாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் குறிப்பிட்டும் இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையென அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை ஊருக்குள் புகுந்துள்ள யானைகளை அப்புறப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் அப்பிரதேசவாசிகள்,இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

(படங்கள்) ஊருக்குள் புகுந்த யானைகள் அட்டகாசம்.. பெண்கள் , குழந்தைகள் கடும் அச்சத்தில். (படங்கள்) ஊருக்குள் புகுந்த யானைகள் அட்டகாசம்.. பெண்கள் , குழந்தைகள் கடும் அச்சத்தில். Reviewed by Madawala News on 11/06/2016 02:00:00 PM Rating: 5