கிராத் போட்டியில் முதலாம் இடத்தை பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவானார் பர்ஹானா கலீல்.



- ஜே.எம்.ஹபீஸ் -

மாகாண மட்டத்தில் கிராத் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு கட்டுகெலியாவை ஜாயா வித்தியாலய மாணவி தெரிவாகியுள்ளார்.

உக்குவலையைச் சேர்ந்த செல்வி பர்ஹானா கலீல் தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு முஸ்லிம் சமய கலாச்சாரத்திணைக்களம் நடத்திய கனிஷ்ட பிரிவிற்கான கிராத் ஓதுதல் போட்டியில், வடமத்திய மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.

வடமத்திய மாகாணத்தைச் சேர்ந்த கட்டுகெலியாவை ஜாயா வித்தியாலயத்தில் எட்டாம் தரத்தில் கல்வி பயிலும் இவர் உக்குவலை அஜ்மீர் மகாவித்தியாலய பிரதி அதிபர் பரீனா கலீல் மற்றும் மாத்தலை பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்த கவிஞர் மடவளை கலீல் தம்பதியினரின் புதல்வியாவார்.

எதிர்வரும் 5ம் திகதி கொழும்பில் இடம் பெறும் தேசிய மட்டப் போட்டியில் இவர் பங்கு பற்ற உள்ளார்.


கிராத் போட்டியில் முதலாம் இடத்தை பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவானார் பர்ஹானா கலீல். கிராத் போட்டியில் முதலாம் இடத்தை பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவானார் பர்ஹானா கலீல். Reviewed by Madawala News on 11/01/2016 01:22:00 PM Rating: 5