Ad Space Available here

வெளிநாட்டு மோகம் ? ?இன்றைய கால கட்டத்தில் பிள்ளைகளை அன்னிய நாடுகளுக்கு அனுப்பிவிட்டு தனிமையிலே வெறுமைகாணும் பெற்றோர்களின் நிலமை சற்று கடினமானதுதான்

இடைக்கிடையே உறையாடல்கள் தொலைபேசியினை சளிப்பூட்ட காலப்போக்கில் அதுவும் நின்று போகக் கூடிய தருணங்களில் அதிக வேளைப்பளு காரணமாக உறவாட முடியவில்லையன்ற போலிச்சாட்டுகள் மட்டுமே மிகுதியாகின்றன

பிள்ளைகளுடன் ஒன்றாக இனைந்து வாழவேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் காணல்நீராக கரைந்து போண தருணங்களில் மன்னறையினை நோக்கிய நடைபயின்ற வயோதிப பெற்றோர்களின் நினைவலைகள் பேசுகின்றன

மரணம் சம்பவித்த பிறகு வீசா கிடைப்பதில் பிரச்சினை,மீறி கிடைத்துவிட்டபோதிலும் வந்துசேரும் வரும்வரை என்னை காக்க வைப்பதும் தூரப்பிரதேசங்களிலிருந்து பல்வேறு வேலைப்பளுவுக்கு மத்தியில் வந்தவர்கள் இந்த விடயங்களை பார்த்து முகம்சுளித்து தங்களுக்குள் பேசிக்கொள்வதும் அதை பொருட்படுத்தாமல் எதுவித சிந்தனையுமின்றி வந்தவுடன் இரண்டு சொட்டு கண்னீர் வடித்து கதறி அழுவதும் தொடர்கதையாகவே மாறிவிட்டன என்று. உண்மைதான்

வாழ்வின் பிடிமானமற்றவர்களாகவும், வருத்தவாதைகளின்போது கவனிப்பாறட்ட நிலையில் வைத்தியசாலைகளிலும் அவசியமான தேவைகளுக்காக மற்றயவர்களின் தயவை நாடிநிற்பதுவுமே பிள்ளைகளாகிய நாம்  பிரதியுபகாரமாக விட்டுச்சென்றதையும் உணர்ந்துகொள்ள முடியும்

அவ்வாறான ஓர் சூழ்நிலையொன்று நம் வயோதிபத்தருனத்தில்  நடைபெறாதென்பதற்கு எந்த உத்தரவாதமும் இருக்கப்போவதில்லை இறைவன் நீதமானவன் இவ்வுலகில் செய்யும் தவறுகளுக்கான தண்டனைகளை அனுபவித்தே தீறுவோம் என்பதையும் மறந்துவிடக்கூடாது ஏணனில் பெற்ற உள்ளங்களை தனிமையிலே தவிக்கவைத்துவிட்டு அன்னிய நாடுகளில் அடைக்கலம்கேட்டு காலத்தை கழிப்பதாலும், நிரந்தரமாக வசிப்பதாலும் பெரிதாக ஒன்றையுமே சாதித்துவிடப்போவதில்லை

இன்று பலநூறு பெற்றோர்களின் புலம்பல்கள் இவ்வாறுதான் அமையப்பெறுகின்றன மருமகள்மார்கள் எம்மை சரியாக கவனிப்பதில்லையன்று உண்மைதான் இருக்கின்ற சில பிள்ளைகளையும் வெளிநாடுகளுக்கு அணுப்பிவைத்து விட்டு எமது பிள்ளை அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் வாழ்கின்றார்களன்ற வார்த்தைகளின் தாற்பரியங்களின் விளைவுகள்தான் இவை என்பதை மறுக்கமுடியாது

பெற்ற பிள்ளைகள் உயிரோடிருக்கும்போது மாற்றான்வீட்டுபிள்ளைகள்மீது அதிகாரம் செலுத்துவதும் அவர்கள் நம்மை நன்றாக கவனிக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பதும் எந்தவகையிலும் நியாயமாகாதென்பதையும் ஒருகனம் சிந்தித்தாகவே வேண்டும்

பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் பிள்ளைகளாகிய நாமே வெளிநாடுதான் வாழ்க்கையன வரண்டுபிடிக்கும் போது மனதை நோகடிக்காமல் அணுப்பிவைப்பது அவர்களின் கடமையல்லவா! தேவைக்காகவும், வாழ்க்கைகாகவும் உழைக்கப்போவதில் தவறொன்றும் இல்லை_தேவைக்கு மேலதிகமாகவும் வாழ்வின் மீதுகொண்ட பேராசையின் நிமித்தமும் தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பதுவே தவறு

காலங்கள் கடந்துபோணபின்பும் இழப்புகள் ஏற்பட்ட பிறகும் வருந்துவதாலோ அருகிலிருந்து பார்க்க முடியவில்லையே என்று அழுது புலம்புவதாலோ எவ்வித பலனும் கிடைத்துவிடப்போவதுமில்லை வாழப்போகும் நாட்கள் கொஞ்சம் என்பதால் அன்னிய நாடுகளில் இளமைதனை தொலைத்து முதுமைதனில் இளமைதனை நினைத்து ஏக்கப்பெருமூச்சுவிடுவதை தவிர்த்து சொந்த நாட்டில் உற்றவர்களுடன் வாழ்ந்துவிட்டுப்போவது சிறந்ததுவே

ஆகவே சுயநல உள்ளம் கொண்ட பிள்ளைகளே தொலைபேசியிலும், வாட்செப்பிலும், வைப்பரிலும், தூர இருந்து நலம் விசாரிப்பதை தவிர்த்து சிறந்ததொரு முடிவினை கொண்டு வாழ்க்கையினை அலங்கரியுங்கள்

ஏணனில் தொலைதூரப்பூவாய் மலர்ந்து வாசம் வீசுவதைவிட, ஜன்னலோரமாய் நின்று வாடிவிட்டுப்போவது சிறந்தது.

Muja Ashraff
வெளிநாட்டு மோகம் ? ? வெளிநாட்டு மோகம் ? ? Reviewed by Madawala News on 11/19/2016 08:48:00 PM Rating: 5