Kidny

Kidny

நேற்றைய கல்ஹின்ன சம்பவம். பிடிபட்ட சந்தேகநபர்கள் இதுவரை வாய் திறக்கவில்லை.நேற்று  அங்­கும்­புர பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கல்­ஹின்ன, பெபி­ல­கொல்ல பள்­ளி­வா­ச­லுக்கு முன்­பாக நேற்றுக் காலை மேற்­கொள்­ளப்பட்ட துப்பாக்கிப் பிர­யோ­கத்தில் இளைஞர் ஒருவர் கொல்­லப்­பட்­டதுடன் மற்­றொரு இளைஞர் படு­கா­ய­ம­டைந்து கண்டி போதனா வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­வ­து அறிந்ததே..

கண்டி வீதி, கல்­ஹின்ன எனும் முக­வ­ரியைச் சேர்ந்த 23 வய­து­ மொஹம்மட் ராஸிக் மொஹம்மட் மூபித் எனும் வாலிபரே சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்தார்.

சம்­பவம் தொடர்பில் இரு சந்­தேக நபர்கள் துப்­பாக்கிப் பிர­யோ­கத்­துக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக சந்­தே­கி­கப்­படும் ரீ 56 ரக துப்­பாக்­கி­யுடன் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் இது தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளுக்­காக மத்­திய மாகா­ணத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜய­சிங்­கவின் நேரடி கட்­டுப்­பாட்டில் 6 பொலிஸ் குழுக்கள் நிய­மிக்­கப்­பட்­டும் உள்ளன.

இச்சம்­ப­வத்­தை­ய­டுத்து அங்­கும்­புற பொலிஸார் ஸ்தலத்­துக்கு வந்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

துப்­பாக்கிப் பிர­யோ­க­மானது காரில் இருந்­த­வாறே முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­த­துடன் அதன் பின்னர் அதே காரில் சந்­தேக நபர்கள் தப்­பி­யி­ருந்­தனர்.துப்­பாக்கிச் சூட்­டுக்கு ரீ 56 ரக துப்­பாக்கிப் பயன்­ப­டுத்­தப்ப்ட்­டுள்­ளதை ஸ்தல விசா­ரணை ஊடாக உறுதிச் செய்­து­கொண்­டுள்ள பொலிஸார் மேல­திக விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

இதன்­போது சம்­பவம் தொடர்பில் அறிந்த மத்­திய மாகா­ணத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜய­சிங்க, கண்டி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஏக்­க­நா­யக்க, சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஆகி­யோரின் மேற்­பார்­வையில் விசா­ர­ணை­க­ளுக்கு என அங்­கும்­புர பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி தலை­மையில் 6 பொலிஸ் குழுக்­களை விசா­ர­ணை­க­ளுக்கு நிய­மித்­துள்ளார்.

சம்பவத்துக்கு பயன்படுத்தபட்ட  சிவப்பு நிற காரை, கண்டி பூஜா­பிட்­டிய பகு­தியில் கைவி­டப்­பட்­டி­ருந்த நிலையில் மீட்­ட பொலிஸாரின் விசாரணை  தொடர்ந்த நிலையில், துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்ட இடத்­தி­லி­ருந்து 4 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள கபல்­கஸ்­தென்ன பகு­தியில் இருந்து சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய சந்­தேக நபர்கள்  இரு­வரை பொலிஸார் கைது செய்­தனர்.

பொது மக்­களின் உத­வி­யுடன் மேற்­படி சந்­தேக நபரகளை  பொலிஸார் கைது செய்­துள்­ள­துடன் அவ­ரி­ட­மி­ருந்து துப்­பாக்கிச் சூட்­டுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக நம்­பப்­படும் ரீ 56 ரக துப்­பாக்கி ஒன்­றி­னையும் 20 தோட்­டாக்­க­ளையும் பொலிஸார் மீட்­டு கண்டி மஹி­யாவ பகு­தியைச் சேர்ந்த மொஹம்மட் அலி  மற்றும் இந்துனில் எனப்படும் வத்தளை பிரதேச நபரும்  பொலிஸார் தொடர்ச்­சி­யாக விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­யுள்ள நிலையில் அவ­ருடன் மேலும் ஒருவர் குற்­றத்தை புரிய வருகை தந்­த­தாக பொலிஸார் உறுதி செய்­துள்­ளனர்.


இனவாத ரீதியில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதா என ஆரம்பத்தில் சந்தேகம் நிலவிய நிலையில், சந்தேக நபர்களும், பாதிக்கப்பட்ட தரப்பு இரண்டிலும் முஸ்லிம்கள் காணப்படுவதால் மேலதிக விசாரணைகளை கைதான இருவரையும் இரு போலிஸ் நிலையங்களில் வைத்து தனித்தனியாக நேற்று விசாரித்துள்ளனர்.

இருந்தும் நேற்று முழு தினமும் சந்தேக நபர்கள் இதுபற்றி எதுவும் கூறாமல் உளர்த்தி வந்துள்ளனர்.

அதனை தொடர்ந்து இன்று சந்தேக நபர்களை பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜய­சிங்க கண்டி போலிஸ் நிலையத்துக்கு அழைத்து வர கட்டளை பிறப்பித்துள்ளதாக சற்றுமுன்னர் காவல்துரையையை தொடர்பு கொண்டபோது தன்னுடம் அவர்கள் தெரிவித்ததாக  மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் மடவளை நியுஸுக்கு  தெரிவித்தார்.

தற்போது கிடைத்துள்ள முதற்கட்ட தகவல்களின் படி இந்த் கொலை தனிப்பட்ட குரோதம் காரணமாக இடம்பெற்றுள்ளாத அறியமுடிகிறது.
நேற்றைய கல்ஹின்ன சம்பவம். பிடிபட்ட சந்தேகநபர்கள் இதுவரை வாய் திறக்கவில்லை. நேற்றைய கல்ஹின்ன சம்பவம். பிடிபட்ட சந்தேகநபர்கள் இதுவரை வாய் திறக்கவில்லை. Reviewed by Madawala News on 11/21/2016 11:20:00 AM Rating: 5